பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


திருவள்ளுவரை அடுத்துத் தாயுமானவர் பாடலைக் கையாண்டுள்ளார். அவரது “ஆசைக்கோர் அளவில்லை” என்னும் பாடலைக்கொண்டு, தமது“சுய சரிதை”(42) யில்,

ஆசைக் கேரள வில்லை விடயத்துள்
ஆய்ந்த பின்னங் கமைதி யுண்டாமென
மோசம் போகலிர் என்றடித் தோதிய ,
மோனி தாளினை முப்பொழு தேத்துவாம்”
-என

அமைத்தார்.

“யான்” என்னும் கவிதையைத் தொடங்குபவர், அதன் முகப்பாக,

அருளால் எவையும் பாறென்றான்-அதை
அறியாதே கட்டியென் அறிவாலே பார்த்தேன்”
-என்னும்

தாயுமானவர் பாடலை வைத்தார்.

இது போன்று பட்டினத்தார் பாடலாகிய,

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.”
—பட்டினத்துப் பிள்ளையார்

-எனத் தமது “சுயசரிதை”யைத் துவங்குமுன் முகப்பாக அமைத்தார்.

தாயுமானவர் பாடல்களைத் தமது கட்டுரைகளில் பல இடங்களில் அமைத்துள்ளார்.

திருவள்ளுவர், தாயுமானவர் ஆகிய இருவரது பாடல்களை அதிகம் கையாண்டாலும் பாரதியார்க்கு

59