பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLLLLLL LLLL LL LLLLL LLLTT LLLLLLTTTLLLLSSK SLLLLL 5

நாடு விடுதலை பெற்றுவிட்டது. இந்த மாபெரும் பாரம்பரியமும் வரலாற்றுச் சிறப்பும் பண்டயப் பெருமைகளும் நிறைந்த பாரத தேசம் சேதமுற்றாலும், ஒரு மாபெரும் ஜனநாயக நாடாக ஒரு சிறப்பு மிக்க குடியரசாக உலகில் இன்று அங்கீகாரம் பெற்றுள்ளது.

அண்மையில் 1980-ம் ஆண்டுகளில் பாரதியாரின் ஜன்ம தினத்தின் நூற்றாண்டு விழாவின் போது அவருடைய படைப்புகள் மிகவும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. அவரைப் பற்றிய, அவருடைய படைப்புகளைப் பற்றிய பல செய்திகளும், பல புதிய செய்திகளும் வெளிவந்தன. பல அமைப்புகளும் ஆர்வலர்களும், அப்பணியில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுப் பாரதியின் புகழைப் பரப்பினர். தமிழகத்தின் தவப்புதல்வனாகத் தோன்றிய அந்த மகானின், அந்த ஞானியின், அந்த சித்தரின் அந்த மகாகவியின் கருத்துக்களும், தத்துவங்களும் அவருடைய ஆணைகளும், கட்டளைகளும் தமிழ் மக்களின் உள்ளங்களை உலுக்கியது. அவரைப் பற்றிய அறிமுகமும் அங்கீகாரமும் மேலும் விரிவாகத் தமிழகத்திலும் பாரத நாட்டிலும் பரவியது.

மகாகவி பாரதி பாரதத்தின் தேசிய கவியாகப் புகழ் பெற்றார். ஆயினும் அவருடைய கவிதைகளைப் போல அவருடைய உரைநடை மொழியும், கட்டுரைகளும் அவைகளின் ஆழ்ந்த கருத்துக்களும் போதுமான அளவில் மக்களிடம் இன்னும் செல்லவில்லை என்று தமிழகத்தின் பல அறிஞர்களும் கருதுகிறார்கள். அந்தக் குறை நீடிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் மூலம் பாரதியின் உரைநடைக் கருத்துக்களைப் பற்றிய ஒரு கட்டுரைப் போட்டி