பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTTT TTTTTL TCLL LLCL LLLLLLLLGLL GLLLLLS LL LLLLLLLL 97

1 2 - P_6Ꭰ EᏂ வாழ்க்கையின் பயன்:

உலக வாழ்க்கையின் பயன் என்னும் தலைப்பில் ஒரு சிறந்த கட்டுரையை பாரதி எழுதியுள்ளார். அக்கட்டுரையில் அவருடைய உலகியல் கருத்துக்களை மிகவும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

உலக வாழ்க்கையில் மானிடராலும் மற்ற உயிர்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த பயன் யாது? எப்போதும் மாறாத எப்போதும் குறையாத இன்பமெய்தி வாழ்தலாகும்.

இவ்வகையான இன்பத்தை எய்தும் பொருட்டாகவே மானிடர் கல்வி கற்பதும், பொருள் சேர்ப்பதும், தவங்கள் செய்தலும், அரசாள்வதும், களவு செய்தலும், கொலை செய்தலும், பேசுதலும், சிரித்தலும், ஆடுதலும், பாடுதலும், அழுதலும், உழுதலும் - எல்லா தொழில்களும் செய்கிறார்கள். மனிதர் மட்டுமேயன்றி மற்ற எல்லா உயிர்களும் தாம் செய்யும் எல்லாத் தொழில்களையும் மேற்கூறிய ஒரே நோக்கத்தோடுதான் செய்கின்றன” என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

இந்திய நாடும் மக்களும் சுதந்திரத்தை இழந்து அடிமைப் பட்டிருந்த காலத்தில் எண்ணற்ற துன்ப துயரங்களுக்கு ஆளானார்கள். பல படையெடுப்புகளாலும் ஆக்கிரமிப்புகளினாலும் ஏராளமான மக்கள் மடிந்தார்கள். பல ஆலயங்களும், கோயில்களும் கலைச் செல்வங்களும் படையெடுப்பாளர்களாலும், ஆக்கிர -மிப்பாளர்களாலும் அடித்து நொறுக்கி நாசமாக்கப் பட்டன. கொள்ளையடிக்கப் பட்டன, சூரையாடப் பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நமது நாட்டு செல்வங்களும் சொத்துக்களும் சூரையாடப் பட்டன. சாதாரண மக்களுடைய தொழில்கள் விவசாயம், நீர்நிலைகள், பராமரிப்பு, கால்நடை பராமரிப்பு,