பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் &qpguêsqbāgāsār-et சீனிவாசன் 99

பாரதி சிந்தித்துத்தான் மக்களுடைய மற்ற ஜீவராசிகளுடைய துன்பங்களைப் போக்குவதற்கும் மனிதன் பலவகை முயற்சிகளையும் எடுத்து வருவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மனிதன் எவ்வளவு தான் பாடு பட்டாலும் மக்கள் முழுமையான நித்தியானந்த நிலையை எய்தவில்லை. உலகத்தில் தவிர்க்க முடியாத துக்கம் நீடித்துக் கொண்டேயிருக்கிறது.

“இங்ங்ணம் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னிடத்தும் பிற உயிர்களிடத்தும், பொருள்களிடத்தும் தீராத சகிப்பின்மையும் பயமும் வெறுப்பும், கவலையும் ஏற்படுவதற்குக் காரணம், அநாதி காலம் தொட்டு ஜீவர்களுக்குள்ளே நிகழ்ந்து வரும் ஓயாத போராட்டத்தால் ஏற்பட்ட பழக்கந் தவிர வேறொன்றுமில்லை” என்று பாரதி குறிப்பிடுகிறார். பாரதி அங்கிருந்து வேதாந்த நிலைக்குச் செல்கிறார். வேதாந்த ஞானத்தால் தான் அத்தகைய விரோதங்களையும் முரண்பாடான பழக்க வழக்கங்களையும் நீக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

“எல்லா வஸ்துக்களும் எல்லாக் குணங்களும் ஒன்றென்னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப் பழக்கத்தை நீக்க வேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய காலம் முதலாக எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது. எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்திலும் உதித்திருக்கிறது. எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்துள் அவை அழுத்தாமல், வாயினால் பிதற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பாரதி குறிப்பிடுகிறார்.

“ஆயினும் பண்டிதர்களும் பாமரர்களும் ஒருங்கே அந்த ஞானத்தை நித்ய அனுபவத்தில் கொண்டு வர முடியாத படி பழைய அஞ்ஞானம் தடுக்கிறது” என்றும் கூறுகிறார்.