பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTT LS LS L MTS LS TCLy LLCCLL LLLLLLL TTTLLLLSK LLLLLS SSSS GG

“இதிலெல்லாம் இது வேகாது - உலகத்தாருடன் கூடி எல்லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்து கொண்டு உலக விவகாரங்களை நடத்திய வண்ணமாகவே சஞ்சலத்திற்குத் தன் மனதைக் கட்டக் கூடிய திறமையே பயன் தரக் கூடியது. மற்ற முயற்சிகளெல்லாம் வீண்.

"நீதி, ஸமாதானம், ஸ்மத்துவம், அன்பு இவற்றாலேயே இவ்வுலகத்தில் தீராத தைரியமும் அதனாலே தீராத இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை” என்று பாரதியார் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

பாரதி உலக வாழ்க்கையின் பலன்களை அனுபவிப்பதே இன்பம். அதாவது முழுமையான பலன்களை முழுமையாக அனுபவிப்பதே முழுமையான இன்பம் என்னும் கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நமது புருஷார்த்தங்களும் அதையே கூறுகின்றன. பாரதியும் அந்த வழியில் தான் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்.

மனிதன் மட்டுமல்ல. உலகில் உள்ள எல்லா உயிர்களும் மட்டில்லாத மகிழ்ச்சியுடன் இன்பத்தை எய்த வேண்டும். அதற்கான கடும் முயற்சிகளைச் செய்ய வேண்டும். மனப் பயிற்சி செய்து மன உறுதியும் தைர்யமும் பெற வேண்டும். இந்த மன உறுதியை எங்கோ போய் தனித்திருந்து பயிற்சி செய்து பெறுவதல்ல. உலக மக்களுடன் கலந்து உறவாடிப் பழகிப் பணியாற்றி, உலக விவகாரங்களை நடத்திக் கொண்டே மனப் பயிற்சியை மன உறுதியைப் பெற

வேண்டும், என்பதும்,