பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. உலக வாழ்க்கையின் பயன் 102

நாடு விடுதலை பெற்று நாட்டு மக்கள் நல் வாழ்வு பெறுவதற்கு மக்கள் அனைவரின் மன உறுதி மிக்க செயல் பாடுகள், கட்டுப்பாடு மிக்க செயல்பாடுகள் மிக அவசியம், இது சாத்தியம் என்பதும் பாரதியின் உறுதியான நம்பிக்கையாகும்.

எனவே உலக வாழ்க்கையிலிருந்து பிரிந்து தனித்து நின்று எதையும் செய்து விட முடியாது. உலக வாழ்க்கையில் இணைந்து நின்றே அத்தனை கடமைகளையும் சாதிக்க முடியும். அத்தனை காரியங்களையும் சாதிக்க முடியும். அத்தனை காரியங்களையும் செய்து முடித்து நிறைவேற்ற முடியும் என்பது பாரதியின் அசையாத நம்பிக்கையாகும்.

xx xx xx