பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.-உழைப்பு 104

கொண்டிருக்கிறார்களே தவிர சுய முயற்சிகள் செய்வது குறைவாகவே உள்ளது. வேலைத் தேடித்தரும் அரசாங்க அலுவலகத்தைத் தான் நம்பிக்கொண்டிருக்கிறார்களே தவிர சொந்த முயற்சியில் ஈடுபடுவது குறைவாகவே இருக்கிறது. படித்தவர்களுக்கெல்லாம் அரசாங்க அலுவலகங்களிலேயே உத்தியோகங்கள் கிடைப்பது என்றால் அது சாத்தியமில்லை. தமிழ் நாட்டில் இப்போது சில சுய முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. பெண்களில் சுய உதவிக் குழுக்கள் பெருகி வருகின்றன.

அரசாங்க அலுவலகங்கள், அரசுத்துறை, பொதுத்துறை, விவசாயத் தொழில் முதலிய பகுதிகள் பலவற்றில் பணிக் கலாச்சாரம் குறைந்திருப்பது பற்றிப் பல தகவல்கள் வருகின்றன. அது பற்றிச் சொல்வாரும் இல்லை, கேட்பாரும் இல்லை. பொதுவாக நமது நாட்டில் பணிக் கலாச்சாரத்தில் அபிவிருத்தி காண வேண்டும். உற்பத்தி திறனில் அபிவிருத்தி காணவேண்டும். நாட்டை உயர்த்த வேண்டும் என்னும் தேச பக்த உணர்வு மேலோங்க வேண்டும். அன்னிய ஆட்சியை எதிர்த்த வேகம் நாட்டை உயர்த்த வேண்டும் என்பதிலும் காண வேண்டும். உழைப்பால் தான் நாட்டை உயர்த்த முடியும். இதில் எந்த இடத்தில் எந்தக் குறை ஏற்பட்டாலும் அது நீக்கப் பட வேண்டும்.

எந்த வேலையிலும் நாம் முழுமையான ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு செய்தால்தான் அவ்வேலை சோபிக்கும். முழுமை பெறும். நிறைவு பெரும் என்பதற்கு பாரதி ஒரு சிறந்த உதாரணம் கூறுகிறார்.

தன்னை மறந்து வித்தையின் இன்பத்திலே தன் புத்தி

முழுவதையும் செலுத்தி ஆடும் ஒரு நாட்டியப் பெண் நன்றாக ஆடுவாள். நாம் ஆழகோ அழகில்லையோ, வகுப்பு சரியான