பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 6

நடைபெற்றது. அப்போட்டியில் தமிழறிஞர்கள், பாரதி அன்பர்கள் பலரும் பங்கு கொண்டனர். அந்த முயற்சி சிறப்பாகவே நடைபெற்றது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள இதர பல்கலைக் கழகங்களும் இதர தமிழ்துறைகளும் பாரதியின் உரைநடையையும் கட்டுரைகளையும் அதன் கருத்துக்களையும் பிரபலப்

படுத்துவதற்கான இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், ஆகியவற்றின் தமிழ் பாடநூல்களில் பாரதியாரின் உரைநடைக் கட்டுரைகளைக் கொண்டுவர வேண்டும். பாரதியின் கட்டுரைத் தொகுப்புகளைத் தனிநூல்களாக வெளியிட்டும் மாணவ மாணவிகளிடம் இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல

வேண்டும்.

பாரதி அன்பர்கள் பலரும், பாரதியைப் பற்றிப் பல ஆய்வுகள் செய்தும் அவருடைய படைப்புகள் தொடர்பான சில நூல்களை எழுதியும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் என்னிடம் பாரதியின் உரைநடை பற்றியும், விளக்க நூல்கள் எழுதும் படி ஆலோசனை கூறினார்கள். ஏற்கனவே, “பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி”, “பாரதியின் புதிய ஆத்தி சூடி - ஒரு விளக்கவுரை”, என்னும் எனது இரு நூல்களும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் சிறந்த நூல் என அங்கீகரிக்கப் பட்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டு தமிழ்மக்களிடம் குறிப்பாகக் கல்வி நிலையங்களுக்கும், நூலகங்களுக்கும் சென்றிருக்கின்றன. முதல் பதிப்பு முடிந்து இரண்டாவது பதிப்பும் வெளியிடப்பட்டு அதன் பிரதிகளும் வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. “பாரதியின் தேசீயம்” என்னும் ஒரு சிறு நூலும் நான் எழுதி வெளியிட்டு அந்த நூலும் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. பாரதியின்