பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14-இந்துக்களின்டஒற்றுமை IDB

கடவுளிடத்தில் செலுத்தும் பக்தி என்பது கடவுள் படைத்த அனைத்து ஜீவன்களிடத்திலும் செலுத்தும் அன்பாகும். இந்த அன்பின் நிலை பாட்டில் ஞானம் பிறக்கிறது. அந்த நெருப்பில் “நான்”, “எனது” என்னும் அகந்தை வெந்து சாம்பலாகி விடுகிறது.

மேலும் பாரதி குறிப்பிடுகிறார்,

“படைத்தல், காத்தல், மாற்றுதல், அருள் செய்தல், வலிமையுடமை, தெளிவுடமை, ஒளியுடமை எங்கும் பரந்திருக்கும் தன்மை, பல படத்தோன்றும் தன்மை, ஆனந்த இயல்பு முதலிய கடவுளின் எண்ணிறந்த குணங்களையும் இயல்புகளையும் பிரிவு படுத்தி நோக்குமிடத்தே வேதம் அந்தந்த குணங்களுக்கும் இயல்புகளுக்கும் தக்கபடி அவன் ஒருவனுக்கே பிரமன், சிவன், விஷ்ணு, இந்திரன், வாயு, ஸோமன், சூரியன், வருணன், அக்கினி பகவான் முதலிய நாமங்களை வழங்குகிறது.

“இந்த விஷயத்தை ரிக் வேதத்தில் “ஏகம் ஸத்’ என்ற தொடக்கமுடைய மந்திரத்தில் மிகவும் தெளிவாக விளக்கிக் காட்டப் பட்டிருக்கிறது.

“எனவே வேதத்தின் வழி நூல்களாகிய புராணங்களில் இக்கடவுளை உணர்வதற்கு ஸாதனங்களாகிய தவம், பக்தி, யோகம், முதலியவற்றை அனுஷ்டிக்கும் நெறிகளும் இந்த வழியே செல்ல விரும்புவோனுக்கு இன்றியமையாதனவாகிய திட சித்தம், நேர்மை, ஜீவகாருண்யம் முதலிய குணங்களைப் பழக்கப் படுத்திக் கொள்ளும் நெறிகளும், இந்த குணங்கள் ஏற்படாத படி தடுக்கும் பயம், கர்வம், கோபம், நிஷ்டுரம் முதலிய அசுர குணங்களை அறுக்கும் நெறிகளும் பல திருஷ்டாந்தங்களாலும் சரித்திரக் குறிப்புகளாலும், உவமைக் கதைகளாலும், உபதேசங்களாலும், விஸ்தாரமாகக் காட்டப்

பட்டிருக்கின்றன” என்று பாரதி கூறுகிறார்.