பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLLLLL LLLL LL LLLLLLS MCLL LLLLLLLLTTTySK LLyLLS LL

கிளர்ச்சி நடத்தினார்கள். சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்த போது பிரிவினைக் கிளர்ச்சியும் வகுப்புக் கலவரங்களும் படுகொலைகளும் நடந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்ப் பலியாகி நாடு துண்டாடப் பட்டு, பாரத நாடு இந்தியா, பாகிஸ்தான் என்னும் இரு நாடுகளாக சுதந்திரம் பெற்றது. பாகிஸ்தான் என்பது இஸ்லாமிய நாடாகப் பிரிந்தது. மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் (இப்போது பங்களாதேஷ்) ஆகிய பாகிஸ்தான் பகுதிகளிலிருந்தும் பல லக்ஷக்கணக்கான ஹிந்து மக்கள் தங்கள் பூர்வீக இடங்களிலிருந்து உடமைகள் அனைத்தையும் இழந்து அகதிகளாக இந்தியாவுக்குள் வந்து அவர்கள் இந்தியாவின் பல இடங்களிலும் குடியேற்றப் பட்டார்கள். இந்திய வரலாற்றில் நாட்டுப் பிரிவினை என்பது ஒரு கண்ணிர்க் கதையாகும். பின்னர் அந்தப் பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் மொழி அடிப்படையில் பிரிந்து பங்களாதேஷ் நாடு தோன்றி நிலை பெற்றது.

எஞ்சிய பாரதம் இந்திய யூனியன் என்னும் பெயரில் அரசு அமைந்து அதன் அரசியல் சட்டமும் உருவாக்கப் பட்டு இந்தியக் குடியரசாக அறிவிக்கப்பட்டு ஒரு ஜனநாயக நாடாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சட்டப்படி இங்கு வாழும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மத சிறுபான்மையினர் என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்கள். 1950-ம் ஆண்டில் அரசியல் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தில் நாட்டின் சமுதாய வாழ்வில் பல புதிய வளர்ச்சி நிலைகளும் அனுபவங்களும் ஏற்பட்டு நமது அரசியல் சட்டத்திலும் பல திருத்தங்களும் கொண்டு வரப் பட்டு நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மதச் சிறுபான்மையினர் என்னும் முறையில் முழுமையான மத சுதந்திரம் - வழிபாட்டு சுதந்திரம் பெற்றவர்கள் என்பது அரசியல் சட்டத்தால் மட்டுமல்ல