பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உஇந்துத்குளின்டஒற்றுமை 112

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ள ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள ஒன்றாகும். மற்றப்படி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் அனைவரும், அரசியல் பொருளாதார சமுதாய கல்வி கலாச்சாரத் துறைகளில் அனைவரும் சமமாகும். இதை பரஸ்பரம் அங்கீகரித்து நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும். இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களும் இந்திய முஸ்லிம்கள் என்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்தியக் கிறிஸ்தவர்கள் என்றும் தேச பக்தியின் அடிப்படையில் முழுமையாக இணைக்கப்பட்டால், சிறுபான்மை பெரும்பான்மை என்பது தீர்ந்து அனைவரும் சமம் என்னும் உணர்வு மேலோங்கி இந்திய ஒற்றுமை நிலைபெற்றுவிடும்.

பாரத சமுதாய அமைப்பில் வரலாறு பூர்வமான அதன் கலாச்சாரத்தில் வழிபாட்டு சுதந்திரம் என்பது எல்லாக் காலங்களிலும் முழுமையாக அனைவருக்கும் இருந்திருக்கிறது. சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், முருகன் கோவில்கள், ஏராளமான அம்மன் கோவில்கள் முதலியன இருப்பதைப் போல பள்ளி வாசல்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் இருப்பதிலும் அவைகள் சிறப்பாகச் செயல் படுவதிலும் அவர்களுடைய திருவிழாக்களும் நோன்புகளும் நடைபெறுவதிலும் யாருக்கும் ஆட்சேபணைகளும் முரண்பாடுகளும் இருந்ததில்லை. ஆனால் இந்தப் பிரச்னைகளில் சில வலராற்றுப் பிழைகளும் அரசியல் உள்நோக்கங்களும் ஆக்கிரமிப்பு நோக்கங்களும் இருக்குமாயின் அப்போது முரண்பாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. அவைகளையும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தைகள் மூலம் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம்.

நமது நாட்டில் சில அரசியல் சுயநல சக்திகளால் ஒரு தப்பெண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் என்றால் சிறுபான்மையினர். கிறிஸ்தவர் என்றால் சிறுபான்மையினர். அவர்கள் தனிச்சலுகைகளும் சிறப்புச் சலுகைகளும் பெற்றவர்கள்.