பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

umU$u$cir a-cowpoudev •■r&u6v uoppuB &qpgruesossi-et சீனிவாசன் 113

ஆனால் இந்து என்றால் மதவாதி, வகுப்புவாதி, சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று கூறப்படுகிறது. இது என்ன வேடிக்கை? அறிவார்ந்த மக்கள் சிலர் கூட இப்படிப் பேசுகிறார்கள். இத்தகைய மூடங்களை அகற்ற வேண்டும்.

பாரதி காலத்தில் இந்திய மக்களைப் பிரிவினைப் படுத்தும் இத்தகைய பிரச்னைகள் இல்லை. ஆனால் அவர் காலத்தில் அன்னிய ஆட்சியின் கொடுமைகள், அவர்களின் ஆதிக்கம், கருத்து ஊடுறுவல், காரணமாக இந்துக்களின் பூர்வீக ஞானமெல்லாம் சிதைந்தும் மறைந்தும் கிடந்தது. இந்தச் சூழ்நிலையில் இந்துக்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து இந்து தர்மம் ஒற்றுமை நிலை எய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதிக ஞானமும் எய்தி, பாரத நாட்டின் மிக உயர்ந்த பூர்வீக ஞானத்தை உலகரியச் செய்ய வேண்டும். அவைகளையெல்லாம் உலகின் பலவேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்து உலகெங்கும் பரப்ப வேண்டும். அப்போது பாரத புத்திரன் உலகத்தின் ஆச்சானியன் ஆவான் என்று பாரதி சிந்தித்தார். அதற்காக, அதாவது,

வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சங்க நூல்கள், காப்பியங்கள், சைவத்திரு முறைகள், வைணவப் பிரபந்தங்கள், இசை நூல்கள், இந்திய மொழிகளில் உள்ள பலவேறு கலை இலக்கிய நூல்கள், அறிவியல் தொழில் நுட்ப நூல்கள், வைத்தியம் மருந்தியல் நூல்கள், சிற்பம் கட்டிடக் கலை நூல்கள், பஞ்ச பூதங்களைப் பற்றிய நூல்கள், நீரியல், இயற்பியல், வானவியல், கணிதவியல் நூல்கள் முதலியவற்றையெல்லாம் இக்காலத்தில் வழங்கும் இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும், மொழி பெயர்த்து பாரதமெங்கும் உலக மெங்தம் பரப்ப வேண்டும். இதை ஒரு மகத்தான பேரியக்கமாக நடத்த பார்தத்தின் அறிவுச் செல்வர்கள் பண்டிதர்கள் முன் வர வேண்டும் என்று பாரதி சிந்தித்தார்.