பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கொள்கையும் செய்கையும் 114

15. கொள்கையும் செய்கையும்:

“கொள்கைக்கும் செய்கைக்கும் உள்ள துரம்” என்னும் தலைப்பில் பாரதியார் ஒரு சிறந்த வலுவான கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்டுரையைத் தனது உரைநடையில் எழுதியுள்ளார். அக்கட்டுரை அவருடைய உரைநடைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவருடைய அரசியல் கருத்துக்கு நல்லதொரு உதாரணமாகும். அவருடைய தேசபக்த உணர்வு நிலைக்கும் சுதந்திர வேட்கைக்கும் கொள்கை உறுதிப் பாட்டிற்கும் ஒரு நல்ல சாட்சியமாகும். அரசாங்க நிர்வாகத்தை அவர் விமர்சனம் செய்துள்ள முறையே அலாதி.

பாரதி கூறுகிறார் “ஒருவன் கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால் வயிற்றுக்கு சோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மானமிழந்தும் துன்பமடைய வேண்டியதிருக்கிறது”என்று தொடங்கி, மேலும், “குடியான -வனாயிருந்தும் பயிர்த் தொழில் செய்யவோ அநேக தடங்கல்கள் இருக்கின்றன. பட்டத்தில் மழை பெய்யவில்லை. அப்படி மழை பெய்தாலும் உழ எறுதுகள் இல்லை. உழுதாலும் விதைக்க வித்துக்கள் இல்லை. விதை விதைத்தாலும் களைகளை சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்துக் காவல் காத்து மகசூலை அறுவடை செய்து விடு கொண்டு வந்து சேர்த்துச் சுகிக்க ஐவே ஜில்லை. அப்படி வீடு கொண்டு வந்து சேர்த்துப் பலனை அனுபவிக்கவும் இடமில்லை. ஏனென்றால் சர்க்கார் தீர்வைக்கே தானிய தவசங்களைக் களத்தில் விற்று விட வேண்டியிருக்கிறது என்று பாரதி அக்காலக் குடியானவர்களுடைய நிலையைப் பற்றி

எழுதுகிறார்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பாரதியார் காலத்திலிருந்து பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும் பெரும்பாலான