பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLLLLL LSLLLLL LLLL LLLLL LLCCLL LLLLLLLLrTTLLLLSSSSSAAAAS LLLLLLS

உரைநடைப்பற்றி, “ தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை” என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதி முடித்து வெளியிட்டுள்ளேன். இப்போது “பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்” என்னும் தலைப்பில் இந்த நூல் எழுதி வெளியிடப் படுகிறது. பாரதி தொடர்பான வேறு சில நூல்களும் எழுதிக் கொண்டிருக்கிறேன். "ஆழ்வார்களும், பாரதியும்” என்னும் நூலும் எழுதி முடித்து அந்த நூலும் விரைவில் வெளிவரவிருக்கிறது.

“பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்” என்னும் இந்த நூலை எழுதுவதற்கு, ஊக்கமளித்து இதை வெளியிடுவதற்கும் ஆதரவளித்த எனது இனிய நண்பர்களுக்கு எனது அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது முந்திய நூல்களை வெளியிடுவதற்கும் வாங்கிப் பயன்படுத்துவதற்கும் ஆதரித்து உதவியது போல் இந்த நூலுக்கும் நல்லாதரவை நல்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்

கொள்கிறேன்.

நாடு விடுதலை பெற்ற பின்னர், இப்போது நாட்டு முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமாக நாம் பாடுபட வேண்டிய கடமைகளை லட்சியமாகக் கொள்ள வேண்டும். அன்னிய ஆட்சியால் ஏற்பட்ட சேதங்களைப் போக்க, அவர்கள் ஏற்படுத்திய கடுமையான காயங்களையும், புண்களையும் ஆற்ற நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கிறது. அன்னிய ஆட்சி விட்டுச் சென்ற பஞ்சம், பசி, பட்டினி, வேலையின்மை, கல்லாமை, அறியாமை, வறுமை, சுகாதாரமின்மை, நோய், நொடிகள் அச்சம், சோம்பல் முதலிய கேடுகளைப் போக்குவதற்கு ஒரு மகிழ்ச்சியான வாழ்வை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டாக்குவதற்கு நாம் இன்னும்