பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில்-அரசியல்_மற்றும்_சமுதாயத்தருத்தத்தன்அடதீனிவாசன்டட்

விவசாயிகளின் வறுமைக்கு முதல் காரணமாக இருக்கிறது. எனவே விவசாயம் ஒரு தொழில் என்னும் முறையில் கட்டுபடியாகவில்லை. கிராமப்புற மக்களின் கடன் சுமை, கடன் பளு கழுத்தை நெறிக்கிறது. எனவே இன்றைய விவசாயத்துறை பற்றி விவசாய உற்பத்தியைப் பெருக்குவது பற்றித் தனியாக ஆய்வு செய்ய வேண்டும். நாட்டின் முதல் நிலை உற்பத்தியில் அபிவிருத்தி காண்பதற்கான முயற்சிகள் தனி முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இதில் காடுகள் வளர்த்தல், பழம், மலர், தென்னை உற்பத்தியைப் பெருக்குதல், கால்நடைகளைப் பெருக்குதல் ஆகியவைகளிலும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்

பட வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்துப் போலிஸைப் பற்றி பாரதி மிக நுட்பமான வாக்கியங்களில் ஒரு கருத்தை எடுத்துக் கூறியுள்ளார். நாட்டில் திருடு, வழிப்பறி ஆகியவை நடை பெறுவது பற்றிக் குறிப்பிட்டு விட்டு பாரதி பேசுகிறார்.

“பிரயாணிகளோ, ஆங்கிலேயர் ஆசீர்வாதத்தால், நிராயுத பாணிகளாய் இருக்கிறார்கள். போலிஸ் என்ற உள்நாட்டுக் காவற் காரரோ, சம்பளம் சொற்பமானதாலும் அந்நியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாது என்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத் தயாராக இருக்கிறார்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு “எக்கிரிமென்ட்” (உடன் படிக்கை) செய்து கொண்டு அவர்கள் கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத்தள்ளக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பாரதி குறிப்பிடுகிறார். இது ஒரு நிஜத்தை வெளிப்படுத்திக் கூறும் கருத்தாகும். இதில் ஆங்கில ஆட்சிக்கு ஒரு அத்தாட்சி அமைந்துள்ளது.

கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் அதாவது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் காவல்துறை மாநில அரசுகளின் பொறுப்பில் தான் உள்ளது. காவல் நிலையங்களும்