பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல்_மற்றும் #(opgruo;good--> சீனிவாசன் 121

அருமையும் பாரார்; அவ மதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயினாரி

என்ற மூதுரைக்கு இணங்கியே நாம் நடக்க வேண்டும். இவ்வாறு நடக்க முடியாதவன் தான் பேடி என்று ஒப்புக் கொண்டு பின்னடைய வேண்டும். நானும் சுவராஜ்யக் கொள்கையுள்ளவன் என்று முன் வந்து நிற்க வேண்டாம்.

சுதந்திரக் கொள்கையுடையவன் தன் ஆத்மாவைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் இழந்து விடச் சித்தமாயிருக்க வேண்டும். ஹே, பாரதா, சோம்பர் உள்ளவனுக்கு எவ்விதக் கொள்கையும் ஏற்காது. மழையென்றும், வெயிலென்றும், காற்றென்றும், பசியென்றும், தியாகமென்றும், நித்திரையென்றும், பாராட்டாதே. இந்தச் சரீரமே அநித்யம் என்றால் அதையொட்டிய அவஸ்தைகள் நித்தியமாகுமா? இந்திரிய அவஸ்தைகளுக்கு அஞ்சியாவது, இந்திரிய சுகங்களைக் கோரியாவது தேசிய தர்மத்தைக் கை விடாதே. பிரம்மமே நித்தியம். சத்தியமே ஜெயம். நீயும் அடிமைத் தனத்திலிருந்து நீங்க வேண்டும். உன்னுடைய ஜய பேரிகையை அடித்துக் கொண்டு உலகத்தில் எந்த பாகத்தில் யார் யார் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அவரவரை விடுவிக்க வேண்டும். உன் செயலால் பாரத மாதா முன்போல உலகத்திற்குத் திலகமாய் ஜ்வலிக்க வேண்டும். இந்தக் கொள்கைகளைக் கை விடாதே, கை விடாதே கை விடாதே, முக்காலும் சொன்னோம் வந்தே மாதரம் என்று மகாகவி தனது கட்டுரையை முடிக்கிறார்.

பாரதியாரின் இந்தக் கட்டுரை சற்று நீளமானது என்று கூறலாம். இதன் உரைநடை பேச்சு வழக்கில் சரளமாக அமைந்துள்ளது. இக்கட்டுரையில் பாரதி அக்காலத்தில் நிலவிய சில முக்கியமான செய்திகளை எடுத்துக் கூறுகிறார்.