பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.-ராகவ-சாஸ்திரி கிம்:

ஹறிந்துக்கள் தங்கள் தேச பக்தி, தெய்வ பக்தியின் பலம் கொண்டு, உண்மையை வெளிப்படுத்தி உலகம் முழுவதையும் விழிப்படையச் செய்ய வேண்டும் என்று மகாகவியின் உள்ளுணர்வு பேசுகிறது.

ராகவ சாஸ்திரி ஐரோப்பிய உடை அணிந்திருந்தார். ஐரோப்பிய உடையை மறியாதை மிக்க உடையென்று சில இந்தியப் பெரிய மனிதர்கள் கருதிக் கொண்டிருந்த காலம். இன்றும் கூட அந்த நிலை நீடிக்கிறது. அரசியல் வாதிகள் அமைச்சர்கள் இந்திய உடை அணிந்து கொள்கிறார்கள். அதிகாரிகள் ஐரோப்பிய உடையில் காட்சியளிக்கிறார்கள்.

ஒரு தடவை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுபதாம் ஆண்டுகளில் டில்லியில் நான் எட்டு முழவேஷ்டியும் முழுக்கைச் சட்டையும் அணிந்து கொண்டு ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். நான் உணவு விடுதிக்குள் நுழைந்ததும், அதன் உரிமையாளர் எழுந்து நின்று மரியாதை செலுத்தி உள்ளே அமரச் செய்தார். அங்கிருந்த வேலையாட்களும் மிகுந்த மரியாதையுடன் கவனித்தார்கள். நான் சாப்பிட விரும்பியது மசால் தோசையும் நல்ல காப்பியும் தான். அப்போதெல்லாம் மசால் தோசையும் காபியும் டில்லியில் பிரபலமாகியிருந்தது. அதற்கு அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது. அந்த உணவு விடுதியின் உரிமையாளர் வட இந்தியாவைச் சேர்ந்தவர். லாகூர் பகுதியிலிருந்து டில்லி வந்து குடியேறியவர்.

எனக்குக் கொடுக்கப் பட்ட மரியாதையைக் கண்டு நானும் சிறிது வியப்படைந்து, நானும் உணவு பரிமாறும் வேலையாளிடம் என்ன இவ்வளவு மரியாதை என்று கேட்டேன். ஒரு காலத்தில் வேஷ்டி கட்டிக் கொண்டு போனால் டில்லியில் மதராஸி லுங்கி வாலா என்று கூறுவார்கள். இப்போது இந்த மரியாதை எப்படி வந்தது