பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTyL LSLLLLL Ly TCCLy CCCCT LLLLLLTTySK LyLLLS L00

என்று கேட்டேன். அந்த வேலையாள் கேரளாவைச் சேர்ந்தவர். என்னிடம் நல்ல தமிழில் பேசினார். சிரித்துக் கொண்டு, அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறினார். சில தினங்களுக்கு முன்பு டில்லியில் ஒரு பெரிய ஒட்டலில் ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு உடை ஒழுங்கு முறை பற்றி ஒரு அறிவிப்பு இருந்தது. ஐரோப்பிய உடை அல்லது இந்திய தேசிய உடை என்று அறிவித்திருந்தார்கள். மத்திய அரசின் ஒர் உயர் அதிகாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எட்டு முழ ஜரிகை வேஷ்டி முழுக்கைச் சட்டையுடன் வந்தார். அவருடைய துணைவியார் காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் வந்திருந்தார். அந்த ஹோட்டல் உரிமையாளருக்கு வந்த உயர் அதிகாரி யார் என்று தெரியாது. தென்னிந்திய உடையில் வந்திருந்த அவரைத் தடுத்து நிறுத்தி விட்டார். காரணம் உடை ஒழுங்கு முறை, இல்லை என்று கூறினார். அந்த உயர் அதிகாரி தான் உடுத்தியிருந்தது தேசிய உடை என்று கூறி வாதிட்டார். ஹோட்டல் உரிமையாளர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். தென்னிந்திய உடை தேசீய உடையாக அக்காலத்தில் டில்லியில் அங்கீகரிக்கப் பட்டிருக்கவில்லை. மனைவியுடன் வந்திருந்த அந்த உயர் அதிகாரிக்கு இது கெளரவப் பிரச்னையாகி விட்டது. கோபம் வந்து விட்டது. உடனே அவர் தொலைபேசியில் போலிஸ் பெரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். சற்று நேரத்தில் போலீஸ் பெரிய அதிகாரி, பெரிய போலிஸ் படையுடன் போலிஸ் ஜீப் வண்டியில் ஹோட்டலுக்கு முன்பு வந்து இறங்கி விட்டனர். அதற்குள் செய்தி ஹொட்டலுக்கு வந்திருந்த பிரமுகர்களிடம் பரவி விட்டது. அந்தப் போலிஸ் அதிகாரியும் தென்நாட்டைச் சேர்ந்தவர். ஹோட்டல் உரிமையாளர் பயந்து விட்டார். தென்னிந்திய உடை குறிப்பாக தமிழ்நாடு கேரளாவின் வேஷ்டி சட்டை தேசிய உடையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.