பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. g(pg.mu Pipeou 142

இந்தக் கதை மூலம் பாரதி மேலும் சில சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். அவைகளும் நாம் நமது மனதில் கொள்ளத்தக்கதாகும். கதாநாயகன் பேசுகிறார்:

“நான் கஷாயம் தரித்துக் கொண்டு துறவியாக வட நாட்டிலே சஞ்சாரம் செய்து வந்தேன். வந்தே மாதர தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால் என்னை சர்க்கார் அதிகாரிகள் பிடித்து சிறையிடும்படியான முயற்சிகளிலே நான் கலக்கவில்லை. ஜனங்களுக்குள் ஒற்றுமையும் பலமும் ஏற்படுத்தினால் ஸ்வதந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை” என்று

குறிப்பிடுகிறார்.

ஜனங்களுக்குள் ஒற்றுமையும் பலமும் ஏற்படுத்த விரிவான பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். அவை அமைதியான முறையில் அமைய வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும். அவ்வாறு நடத்தப் படும் அமைதியான பிரச்சாரங்களைக் கைவிட அன்னிய ஆட்சியினர் பலதடைகளை ஏற்படுத்தி இடையூறு செய்தனர் என்று பாரதி குறிப்பிடுகிறார். இந்தப் பணிகளை தேசபக்தக் கடமையாக நாம் செய்ய வேண்டும். இதை நான் செய்கிறேன் என்னும் கர்வம் ஏற்படக் கூடாது. இயற்கையின் குனங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன. மூடன் நான் செய்கிறேன் என்று கூறுகிறான்” என்னும் பகவத்கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனம் செய்து கொள்ள வேண்டும் என்பது பாரதியின் வாக்காகும்.

மேலும் பாரதி கதையின் கதநாயகன் பேசுகிறார்:

“பாத சாரியாகவே பல இடங்களிற் சுற்றி விட்டு பலபல தொழில்கள் செய்து கொண்டு லாகூர் நகரத்துக்குப் போய் சேர்ந்தேன்.