பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

unustuos e-swspan="déo ewfuso leppte SoestuésC5égossr-e. *seure sor –142

அங்கே லாலா லஜபதி ராய் போன்ற பலரைப் பார்க்க வேண்டும் என்ற இச்சை ஜனித்தது. அவரைப் போய்க் கண்டதில் அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகி கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறது என்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் ஜனங்களுக்குச் சோறு, துணி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் தாம் நிதிகள் சேர்த்து வருவதாகவும் பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங்கள் கொண்டு போய் பஞ்சமுள்ள ஸ்தலங்களில் இருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்து விட்டு “நீரும் போய் இவ்விஷயத்தில் வேலை செய்யக் கூடாதா? என்று கேட்டார். ஆ! ராமச்சந்திரன் அரசு செலுத்திய நாடு. வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு. அங்கு ஜனங்கள் துணியும் சோறுமில்லாமல் பதினாயிரக்கணக்காகத் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்கள் எல்லோரும் எனக்குத் தெய்வங்களல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதையுடம்பை எதற்காகச் சுமக்கிறேன்” என்று கூறுகிறார்.

பாரதியின் இந்த வார்த்தைகள் நமது உள்ளத்தை உலுக்குகிறது. ரீராமச்சந்திரன் ஆண்ட பூமியில் அந்தப் புனித கங்கை என்னும் தெய்வத்திரு நதி பாயும் புண்ணிய பூமியில் அந்த செழிப்பு மிக்க சமவெளியில் பஞ்சமா? மக்களுக்கு உணவும் துணியும் இல்லையா? அன்னிய ஆட்சியாளர்கள் நடத்திய போர்களினாலும், கொள்ளைகளினாலும் நமது நேர்த்தியான நெசவுத் தொழில் நலிந்து, ஆடுமாடுகள் கால்நடைகள் எல்லாம் அழிந்து சாகுபடி நடை பெறாமல் அந்த வளமான பூமி வறண்டு போய் மக்கள் உணவின்றிச் சாகிறார்களா? என்ன கொடுமை என்று அன்னிய ஆட்சி மீது நமக்குக் கடுங்கோபம் ஏற்படுகிறது. கருத்துச் செறிந்த இந்த வார்த்தைகள் மூலம் பாரதி நமது சுய உணர்வைத் தட்டி எழுப்புகிறார்.