பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 10

அன்றைய தேசிய இயக்கத்தில், நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல் என்று கூறித் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட உணர்வு பூர்வமான தேசபக்தன், அரசியல் வழிகாட்டி. அவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். பத்திரிகையாளர், பத்திரிகை ஆசிரியர், கட்டுரையாளர், தமிழ் மொழியில் ஒரு புதிய உரைநடை மரபைத் தோற்றுவித்தவர். ஒரு புதிய கவிஞர் பரம்பரைக்கும் பத்திரிகையாளர் பரம்பரைக்கும் முன்னோடியாக, முன்னுதாரணமாக விளங்கியவர்.

பாரதி சுதேசமித்திரன் பத்திரிகையின் துணையாசிரியராக இருந்து வெகு சிறப்பாகப் பணியாற்றியவர். ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறை காரணமாக அவர் பிரஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் தங்கியிருந்தார். அவர், இந்தியா, விஜயா, சக்கரவர்த்தினி, கர்மயோகி, சூரியோதயம், பாலபாரதம் தர்மம் முதலிய பெயர்களில் பத்திரிகைகளில் நேரடியாக ஆசிரியர் பொறுப்பிலும் வேறு முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றினார். விவேக பானு, ஞானபானு, நியூ இந்தியா, சர்வஜன மித்திரன், முதலிய பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் அனுப்பியும் பாரதி ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எனவே பாரதி ஒரு சிறந்த கவிஞராக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், கட்டுரை -யாளராகவும் விளங்கினார். அதன் மூலம் பாரதி தமிழ் மொழியின் உரைநடையின் வளர்ச்சிக்குப் பெரும் அளவில் தனது பங்கை ஆற்றியுள்ளார்.

பாரதிக்கு முன்னர், தமிழ் உரைநடையின் தொடக்க காலம்

எனக் கூறலாம். ஆரம்பத்தில் தமிழ் உரைநடை பண்டித நடையில் இருந்தது. வள்ளலார் தமிழ் உரைநடையில் எளிமையாக