பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் Черрме *QPgruoqbāśī--> சீனிவாசன் 145

நமது நாட்டில் ஜாதி அமைப்புகளும், ஜாதிப் பாகுபாடுகளும், வேறுபாடுகளும் என்று தோன்றியதோ அன்று முதலே அதற்கு எதிர்ப்பும் தோன்றியிருக்கிறது. சாதீய முறைக்கு சாஸ்திர சம்மதம் இல்லை. வால்மீகி, வியாசர் முதல் பாரதி வரை எத்தனையோ அறிஞர்களும் மகான்களும் ஜாதிய முறைகளை அதன் பாகுபாடுகள், வேறுபாடுகள், கொடுமைகளை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். நமது சமுதாயத்தின் நீண்டநெடும் போராட்டங்களுக்குப் பின்னர், நாடு அடிமைப் பட்டு அவமானப் பட்டு அனுவத்திற்குப் பின்னர் நமது அரசியல் சட்டத்திலும் அனைவரும் சமம் என்று ஏற்படுத்தப் பட்டது மட்டுமல்ல, நடைமுறையில் சமூக நீதியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்.

இன்று எத்தனையோ மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. = ஆயினும் இன்னும் சாதிப் பாகுபாடுகளின் எச்சங்கள் நீடிக்கின்றன. நமது சமுதாயத்திலிருந்து அந்தத் தீமைகள் முழுமையாகத் துடைத்தெரியப் பட்டு ஹிந்துக்கள் அனைவரையும் இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று படுத்த வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப் பாட்டிற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மேம் பாட்டிற்கும் ஹிந்து சமுதாயத்தின் முழு ஒற்றுமை மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

xx xx xxxx xx xx