பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTML LLMT LL TCLLy LLCCLL LLLLLLTeeyLSK yLLLS 000

சிலர் சுதேசியம் என்று சொன்னாலே ராஜாங்கத்தாருக்கு விரோதமாகலாம் என்றெண்ணி நடுநடுங்கி நமது மனத்துக்குள்ளே நமது கர்மத்தில் அபிமானம் கொண்டவர்களாயிருந்தாலும் அச்சத்தினால் வெளிக்கு அசிரத்தை காண்பிக்கிறார்கள்.

இது நிஷ் காரணமான பயம். அவசியமற்ற மூடத்தனம் “வந்தே மாதரம்’ (தாயை வணங்குகிறேன்) என்பது எந்த சட்டத்திற்கு விரோதம்? உள்நாட்டு சாமான்களையே கிரயத்துக்கு வாங்குவேன் என்ற விரதம் செய்து கொண்டால் எவனுடைய சட்டத்திற்கு விரோதம்? என் பணம், அதைக் கொடுத்து எனக்கு இஷ்டமான சாமான் வாங்கிக் கொள்கிறேன். இதில் ராஜாங்கத்தார் ஏன் தலையிட வேண்டும்? கள்ளசாராயம் நாட்டிலே பரவாமல் தடுப்பதற்கு ஆங்கிலேய ராஜாங்கத்தார் யாதொரு உதவியும் செய்யாமல் தீர்வை லாபம் கருதி மதுபானத்தைப் பரவச் செய்து கொண்டு வருகிறார்கள். எத்தனையோ சீர்திருத்த சங்கத்தார் (சுதேசிகள் மட்டுமல்ல, மாச கணிக்கல் சமுவெல், ஸ்மித் முதலிய பல ஆங்கிலேயர்களும் கூட) இது கூடாதென்று முட்டி முட்டிப் பார்த்தும் ஆங்கிலேய கவர்மெண்டார் சிறிதேனும் கவனிக்காமல் இருக்கிறார்கள்.

“இப்படியிருக்க என் தேசத்து கைகோளர்கள் செய்த துணிகளை நான் எனது நாட்டிலே பரவச் செய்வேன் என்றால் இது ராஜாங்கத்தாருக்குப் பெரிய விரோதமாகவா போய்விடும்? எனது குழந்தைகள் எனது மூதாதைகளைப் பற்றியும் எனது தேச சரித்திரத்தைப் பற்றியும் ஒன்றுமே தெரியாமல் நான் நம்பும் வேதங்கள் சாஸ்திரங்கள் முதலியவற்றின் பெருமையை அறியாமல் ஜீவனத்திற்கு வேண்டிய கைத்தொழில்களைப் பற்றி ஏதுமே கற்றுக் கொள்ளாமல் மனிதர்களைப் போனகிராம்” பெட்டிகளாகச் செய்யும் நாசகரமான கல்வி கற்கும் படி செய்து அவர்களைக் கெடுக்க மாட்டேன். ஜாதீயப் பாடசாலைகளுக்கு அனுப்பி ஐரோப்பிய