பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் oppio zgoguës pëgëser-el சீனிவாசன் 149

தாங்குகின்ற நான்கு தூண்களாகும். இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது. இவற்றை ஆதரிக்காமல் இருப்பவர்கள் தேசத் துரோகிகள் ஆவார்கள்.

இவ்வாறு பாரதி அக்கட்டுரையை முடிக்கிறார். இக்கட்டுரை மூலம் கைத்தொழில் விருத்தி, தேசீய வர்த்தகம், ஜனஐக்கியம், சுய பாஷைகளின் வளர்ச்சி, அன்னிய வஸ்து வர்ஜனம் (அன்னியப் பொருள் நிராகரிப்பு - உள்நாட்டு உற்பத்திப் பொருள்களுக்கு ஆதரவு) ஜாதீயக் கல்வி (தேசீயக் கல்வி) பஞ்சாயத்து, சரீரப் பயிற்சி, (உடற் பயிற்சி) ஆகியவைகளைப் பற்றியும் ஆகியவைகளின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறுகிறார். இவை இன்றும் கூட பெரிய அளவில் பொருத்தமானவைகளாகவும், விவாதித்து நிறைவேற்ற வேண்டியவைகளாக உள்ளன. -

பாரதியின் கருத்துப்படி சுதந்திரமும் சுதேசியமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை, ஒன்றோடொன்று இணைந்தவை. ஒன்றையொன்று சார்ந்தவை. சுதந்திரம் என்றால் வெறும் ஆட்சி மாற்றம், ஆட்சியாளர்கள் மாற்றம் மட்டுமல்ல. சுதந்திரம் என்றால் நல்லாட்சி ஏற்பட வேண்டும். மக்களாட்சி ஏற்பட வேண்டும். ஆட்சி நிர்வாகங்களிலும், பொது வாழ்விலும் மக்கள் நாளுக்கு நாள் அதிகமாகப் பங்கு கொள்ள வேண்டும். தீதில்லாத தொழில்கள் செய்யவும், யாருக்கும், தீங்கில்லாத படி எந்த வேலையும் செய்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். மனிதன் அச்சமின்றி அன்பு கொண்டு வாழ வேண்டும்.

சுதந்திரம் என்றால் மக்களின் கல்வியும் ஒழுக்கமும் வளர வேண்டும், பெருக வேண்டும். மக்களின் உழைப்பும் செயல்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். சுதந்திரம் என்றால் நாட்டின் வளம் அதிகரிக்க வேண்டும். செல்வம் பெருக வேண்டும். பாரத