பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சுதேசிய முயற்சி 150

நாட்டில் செல்வ வளமும், மனித வளமும் அதிகம். இரண்டும் இணைந்தால் பாரத நாடு வல்லமை மிக்க நாடாக லோக குருவாக, வையத் தலைமையாக வளர்ந்து விடும். சுதந்திரம் என்றால் மக்களின் நல்வாழ்வு, உடல் நலம், உடல் பலம் அதிகரிக்க வேண்டும். இராமனும், அர்ஜுனனும் அனுமனும் பீமனும் பாரத புத்திரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திரம் என்றால் நாட்டின் கலைகளும், இசையும், நாட்டியமும், கூத்தும், ஆடலும், பாடலும், கவிதைகளும், கட்டுரைகளும் பாட்டும் படிப்பும் பெருக வேண்டும். இவ்வாறு சொல்லிக் கொண்டே டோகலாம்.

பாரதி வழியில் சுதேசியம் என்றால் இவையெல்லாம் சேர்ந்தவை சுதேசியம் என்றால் விவசாயமும் உள்நாட்டுத் தொழில்களும், கால்நடை பராமரிப்பும், பெருக வேண்டும். நாட்டில் முதல் நிலை உற்பத்தி நிலம் காடு மலை, சுரங்கம் கடல் மூலமான உற்பத்தியும் மனித வளமும் பெருக வேண்டும். இவைகளின் மறு உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். விரிவு பட வேண்டும். அதன் மூலம் தேசிய வர்த்தகம் உள்நாட்டு சந்தை பெருக வேண்டும். உள்நாட்டுச் சந்தையின் பெருக்கமும் தேசியச் சந்தையின் வளர்ச்சியும் தான் ஒரு நாட்டின் வளத்திற்கு அளவு கோல். *

சுதேசியம் என்றால் மக்களின் ஒற்றுமை, ஐக்கியம், ஜாதி மத இனமொழி வேறுபாடுகள் நீங்கி அனைவரின் ஒற்றுமை அதிகரிக்க வேண்டும். சுதேசியம் என்றால் நமது நாட்டின் சுய பாஷைகள் வளர்ச்சி பெற வேண்டும். இந்திய பாஷைகள் பதினெட்டு என்று பிரபலம். நமது நாட்டு பாஷைகள் வளம் மிக்கவை. நேர்மையானவை இலக்கியச் செழுமை மிக்கவை. அவைகளை நாம் படிக்க வேண்டும். நமது நாட்டு பாஷைகளுக்கிடையில் நல்லுறவை வளர்க்க வேண்டும். நமது பாஷைகளை உலகின் தரத்திற்கு உயர்த்த வேண்டும். நமது