பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLLLLLL LLLLLL LL TLLLL LLCCLL LLLLLLLLLLLLLSK SS LLLLLLL S 000

பாஷைகளிலேயே அவைகளின் வழியிலேயே படிப்பும் படிப்பித்தலும் வளர்ச்சி பெற வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழ் அமர வேண்டும்.

சுதேசியம் என்றால் உள்நாட்டுப் பொருளுற்பத்தியை பெருக்க வேண்டும். நாம் தேச பக்த உணர்வுடன் நமது நாட்டுப் பொருள்களையே வாங்க வேண்டும்.

சுதேசியம் என்றால் நமது தேசீயக் கல்வி வளர வேண்டும். தேசியக் கல்வி என்பது நமது நாட்டுப் பாரம்பரியம். வரலாறு நமது மரபு கலாச்சாரம் பண்பாடு நாகரிகம், தொழில் தொடர்பு, அறிவு வளர்ச்சி, மனித வளம் ஆகியவற்றை நவீன கால அறிவு வளர்ச்சியுடன் இணைத்து கற்றலும் கற்பித்தலும் ஆகும். இன்று தேசியக் கல்வி என்பது ஒரு முக்கிய பிரச்னையாக முன் வந்துள்ளது. அது பற்றி விவாதித்து நமது பாரம்பரியத்தின் அடிப்படையில் நமது கல்வியை உருவாக்க வேண்டும். அது பற்றித் தனியாக விரிவாக ஆராயலாம். - - --

சுதேசீயம் என்பது, நமக்குள்ளே ஏற்படும் சில்லரைப் பிரச்னைகளை நாமே தீர்த்துக் கொள்வது. என்பது பாரதியின் கருத்தாகும். முன்பு நாட்டில் பஞ்சாயத்து முறை இருந்தது. அம்மாதிரி அமைப்புகளை உருவாக்கிக் செயல் பாட்டிற்குக் கொண்டு வந்தால் நமது நேரமும் காலமும் பணமும் மிச்சமாகும்.

பாரதியின் சுதேசியத்தில் நாட்டு மக்களின் உடற் பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. நாம் நன்கு உடற்பயிற்சி பெற்று பலவானாக இருந்தால் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள். உலகப் போட்டிகளில் நூறு கோடி மக்களைக் கொண்ட பாரத தேசம் ஒரு தங்க மெடல் கூட வாங்கா விட்டால் உலக நாடுகளும் உலக விளையாட்டு வீரர்களும் நம் நாட்டைப் பற்றி நமது இளைஞர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இதைக் காட்டிலும் கேவலம் வேறு