பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சுதேசிய முயற்சி 152

என்ன இருக்க முடியும்? ஊரெல்லாம் உடற் பயிற்சி மையங்கள் ஏற்பட வேண்டும். நமது இளைஞர்கள் மாணவ மாணவிகள் அத்தனை பேரும் உடற் பயிற்சியில் பங்கு கொள்ள வேண்டும். இதை தேச பக்தியுடன் ஒரு தேசிய இயக்கமாக வளர்க்க வேண்டும்.

நமது நாடு சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் கூட நமது தொழில்களும் விவசாயமும், கால் நடை வளர்ச்சியும் போதுமான அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறதா? மேம் பாடு அடைந்திருக்கிறதா? நமது தேசீய சந்தை வளம் பெற்றிருக்கிறதா? விரிவு பெற்றிருக்கிறதா? எந்த அளவில்? நமது மொழிகள் எந்த அளவில் வளம் பெற்று வளர்ச்சி பெற்றிருக்கின்றன? எந்த அளவுக்கு நமது மொழிகள் அனைத்து நாடுகளின் அங்கீகாரம் பெற்றிருக்கின்றன? சுதேசிப் பொருள்கள் மீது நமது பற்று எந்த அளவில் பெருகியிருக்கிறது? அன்னியப் பொருள்களின் மீதான மோகம் எந்த அளவில் குறைந்திருக்கிறது? நமது தேசியக் கல்வியின் வளர்ச்சி எந்த அளவில் இருக்கிறது? நமது வேதங்கள், உபநிஷத்துக்கள், இதிகாசங்கள், நீதி நூல்கள், இலக்கிய நூல்கள், சங்க நூல்கள், அற நூல்கள், காப்பியங்கள், சைவத்திரு முறைகள், திவ்யப் பிரபந்தங்கள், மற்றும் நீரியல் வானவியல் கணிதம், சிற்பம் கட்டிடக்கலை, வைத்தியம், மருந்தியல், கடலியல், கப்பல் தொழில், இசை, நாட்டியம், முதலிய பல கலைகளும் தொழில் நுட்ப அறிவியல்களும் பஞ்சபூத இயல்களும் பற்றிய நமது நூல்களும் இலக்கியங்களும் சாத்திரங்களும் எந்த அளவுக்கு நமது நாட்டு மக்களிடம் அறிமுகம் ஆகியிருக்கின்றன? நமது மக்களின் சிறிய பிரச்னைகள், விவகாரங்கள், தாவாக்கள் முதலியவை நீதி மன்றங்களுக்குப் போய் பண விரயமும், கால தாமதமும் ஆகாமல் ஆங்காங்கே விரைவில் தீர்த்துக் கொள்வதற்கான பஞ்சாயத்து முறைகளை எந்த அளவுக்கு உருவாக்கி அவைகளை செயல் படுத்தி வருகிறோம்?