பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தேசியக்_கல்வி 154

21.தேசியக் கல்வி:

பாரதியார் கல்வி பற்றியும் தேசியக் கல்வி பற்றியும் மிக விரிவாக எழுதியுள்ளார். அது பற்றித் தனியாக ஒரு நூல் எழுதினால் தகும். இங்கு தலைப்பான சில செய்திகளைக் காண்போம்.

ஆங்கிலக் கல்வி பற்றி மகாகவி தனது கவிதைத் தொகுதியில் வலுவான தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.

“கல்வி சிறந்த தமிழ் நாடு - புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு”

என்று தமிழ் நாட்டைப் பற்றிக் கூறுகிறார். இன்னும் பல செய்திகளும் பாரதியின் கவிதைகளில் வருகின்றன.

“தேசமென்பது குடிகளின் தொகுதி. இது கொண்டே நமது முன்னோர் குடிக்கட்டுகளினின்று விலகி நிற்போரைப் பரதேசி என்றனர் போலும்,

“தேசக்கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர்.

--- வீட்டுப் பழக்கம்தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்கியன். விட்டில் பொறுமையுடையவன், நாட்டிலும் பொறுமையுடையவன். மனைவியின் பொருளைத் திருட மனம் துணிந்தோன் கோவில் பணத்தைக் கையாடக் கூசமாட்டான். தான் பெற்ற குழந்தைகளுக்கிடையே பசுஷபாதம் செய்பவன் ஊரிலே நியாயாதிபதியாக நியமனம் பெறத் தக்கவன் ஆக மாட்டான். குடும்பம் நாகரிகமடையா விட்டால் தேசம் நாகரிக மடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில் தேசத்தில் விடுதலை இராது” என்று பாரதி கூறுகிறார்.

“ஆதி + மனிதன் காட்டை அழித்து வீடு கட்டினான். பல வீடுகள் சேர்ந்து கூடி ஊராயிற்று. வீடு என்ற சொல்லுக்கு விடுதலை