பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21._தேசியக் கல்வி 15B

வாழ்க்கைத் துணைவி என்று வள்ளுவர் கூறுகிறார். இல்லத்தரசி என்றும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் இல்வாழ்வான் என்பான் இயல்முடைய மூவருக்கும், அதாவது பிரம்மச்சாரியன், வனப்பிரஸ்தன், துறவறம் மேற் கொண்டுள்ளோன் ஆகிய மூவருக்கும் நல்லாற்றின் நின்ற துணை என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். o

இல்லறம் என்பது இயல்பானது. துறவறம் சிறப்பானது. இல்லறம் உலகச் செயல்பாட்டில் இணைந்தது. உலகைச் செயல் படுத்துவது அதாவது உலக வாழ்க்கையை செயல் படுத்துவதாகும். பாரத தேசத்தில் வேத காலத்திலும், அதற்கடுத்த வேதாந்த காலத்திலும் தமிழகத்தில் சங்க காலத்திலும் துறவு என்பது இருந்ததாகத் தெரியவில்லை. பெரிய மகான்களும் முனிவர்களும் ரிஷிகளும் இல்வாழ்க்கையிலே சிறப்புடன் இருந்திருக்கிற்ார்கள். சமுதாயப் பணிகளில் நாட்டுப் பணிகளில் தாங்கள் சிறப்பாகச் செய்வதற்காகத் தங்களை முழுமையாகப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காக தெளிவான ஞானத்தைப் பெறுவதற்காக பெற்றுள்ள ஞானத்தைக் கூர்மைப் படுத்திக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக அடைவதற்காக தவம் மேற்கொள்ளுதல் கடும் தவம் மேற்கொள்ளுதல் என்பது முற்கால ரிஷிகளில் பழக்கம் இருந்தது. தவம் என்றால் கடும் முயற்சி என்று பொருள்.

பின்னர், வேதங்களையும், வேதாந்தக் கருத்துக்களான உபநிடதங்களையும் மறுத்து புத்தமும் சமணமும் (ஜைனமும்) தோன்றிய காலை ஒரு பக்கம் ஜீவகாருண்யமும், சர்வ ஜன சமத்துவமும் முன் வைக்கப் பட்டு, அவைகளைச் செயல் படுத்துவதற்காக, பல பள்ளிகளும் மடங்களும் ஏற்பட்ட போது, பல்லாயிரக்கணக்கான சமயச் சான்றோர் துறவு பூண்டுச் சமயப் பணிகளிலும் மக்கள் தொண்டிலும் தங்களை முழுமையாக