பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21._தேசியக் கல்வி 15B

ஊர்களும், நாடும் சமுதாயமும் உலகும் அமையும். ஒழுக்கமும், அறிவும் நிறைந்த குடும்பங்கள் அமையுமானால் மிகப் பெரும்பாலான குற்றங்கள் குறைந்து விடும், மறைந்து விடும். சமுதாய அமைதி ஏற்படும்.

குடும்பத்தில் மனைவி - கணவன் மையமாகும். அச்சாணியாகும். அதைச் சுற்றிக் குடும்பம் சுழல்கிறது. குழந்தைகள் பெற்றோர் உடன் பிறந்தோர் அங்கங்களாக அமைந்துள்ளனர். குடும்பத்தில் முழுமையான சமத்துவம் அடங்கியிருக்கிறது. குடும்ப உறவு சமத்துவமான உறவாகும். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக்காக்கவும் சமத்துவத்தைக்காக்கவும் தார்மீகக் கடமையும், உரிமையும் இருக்கிறது. அதையே தர்மம் என்று குறிப்பிடுகிறோம். குடும்பத்தில் உயர்ந்தோர் நாட்டில் உயர்ந்தோர் ஆகிறார்கள். in

வள்ளுவர் அறத்துப்பாலை இல்லறம் துறவறம் என்று இரண்டாகப் பிரித்துப் பேசுகிறார் என்பதை அறிவோம். இல்லறத்தின் சிறப்புகளை மிக விரிவாக எடுத்துக் கூறுகிறார்.

நமது நாட்டில் நமது சமுதாயத்தில் குடும்ப அமைப்பு புனிதமானது. தெய்வீகத் தன்மை கொண்டது. நாம் நமது தெய்வங்களையே கணவன் - மனைவி வடிவத்தில் காண்கிறோம். கல்வி, செல்வம், வீரம் ஆகிய சக்திகளின் இருப்பிடமாகக் காண்கிறோம். குடும்பத்தில் பெற்றோர் தெய்வங்கள் குழந்தைகளும் தெய்வங்களின் வடிவங்கள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது தமிழ்த்தாயின் வாழ்த்து, மாதா பிதா, குரு, தெய்வம் என்பது பாரதத்தின் தெய்வ வரிசையாகும். இவையெல்லாம் நமது சமுதாயத்தின் ஆன்மீக சக்தியால் பிணைக்கப் பட்டிருக்கிறது.

மேலை நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்டதை ஒட்டி நவீன சமுதாயங்கள் ஏற்பட்டன. அதை ஒட்டி அவைகளின் பழைய குடும்ப