பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTL LSLS MT Ly TLLy LLLCLL LLLLLLTySKSSLLLLSLLLLLS SL00

அமைப்பு தகர்ந்து விட்டது. சுதந்திரம் என்ற பெயரில் குடும்ப அங்கங்கள் தனித்தனியாகப் பிரிந்து கலகலத்து விட்டன. அதன் புனிதத்தன்மை மறைந்து விட்டது. பனிக்கட்டி வெயிலில் உருகுவதைப் போல் உருகி விட்டது. அவர்களுக்கு பாரதத்தைப் போல ஆன்மீக சக்தியும் அதன் பண்பாடும் இல்லாமையே காரணமாகும். வெறும் லெளகீக வாழ்க்கை மட்டுமே குடும்ப அமைப்பைப் பாதுகாக்கப் போதவில்லை. அத்துடன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் வலுவான புருஷார்த்தக் கட்டமைப்பு மேலை நாடுகளில் இல்லை. எனவே அங்கிருந்த பழைய குடும்ப அமைப்புகள் பழுத்த இலைபோல் உதிர்ந்து விட்டன.

பாரத நாட்டின் பொருளாதார செயல் பாடுகளிலும், அறம் பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களில் பொருள் துறையிலும் குடும்ப அமைப்பின் ஈடுபாடுகளே அடிப்படையாகும். சாகுபடித் தொழில், கால் நடை பராமரிப்புத் தொழில்,(ஆடு, மாடுகள் பராமரிப்பு, பசுப் பராமரிப்பு நெசவுத் தொழில், மீன் பிடித்தொழில் இன்னும் இதர பல கைத்தொழில்கள் முதலியவற்றில் ஆணும் பெண்ணும் குடும்பமும் சேர்ந்தே உழைக்கிறார்கள். உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். வேலைப் பிரிவினைகள் இருந்தது, ஆயினும் ஒன்றிணைப்புடன் கூட்டாகவே வேலை முறை இருந்தது. மேலை நாடுகளில் நவீன தொழில் முறைகளுக்கு முன்பு கில்ட் அமைப்பு முறைகளிலும் ஆணும் பெண்ணும் குடும்பமும் சேர்ந்து வேலை செய்தார்கள். ஆனால் அங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் யாந்திரிக முறையில் வேலைப் பிரிவினை மூலம் வேலைகள் நடை பெற்றிருந்தன. பாரத நாட்டில் உற்பத்தியில் மட்டுமல்ல நுகர்விலும் குடும்ப அமைப்பே அடிப்படையாக அமைந்திருந்தது. இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகிய அனைத்துப் பணிகளிலும் குடும்பத்தின் ஒன்றிணைந்த கூட்டுச் செயல்பாடே அடிப்படையாக அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டுச் செயல்பாடுகளில் அன்பும்