பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தேசியக்_கல்வி 150

பாசமும் ஆன்மீக உணர்வும் கடமை உணர்வும் இணைந்து பிணைந்து இருக்கிறது.

தற்காலத்திய வளர்ச்சி முறையிலும் கிராமங்களில் மட்டு -மில்லாமல் நகரங்களிலும், பொருள் உற்பத்தித் தொழில்கள், சேவைத் தொழில் அலுவலகம் ஆகியவற்றிலும் கடினமான உடலுழைப்புள்ள கனயந்திரத் தொழில் தவிர மற்றவை அனைத்திலும் ஆண்,பெண் இருபாலாரின் உழைப்பும் இணைந்ததாகவே இன்றியமையாததாகவே அமைந்திருக்கிறது. இன்று சுய உதவிக்குழுக்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன. பல லட்சக்கணக்கான பெண்கள் அவைகளில் பங்கு கொள்கிறார்கள். பங்கு கொண்டு வருகிறார்கள்.

தற்காலப் பொருளாதார வாழ்விலும் சம்பாதிப்பிலும் நுகர்விலும் குடும்ப அமைப்பே அடிப்படையாக உள்ளது.

மூன்றாவதாக கணவன் மனைவி கூட்டு வாழ்க்கையே இன்பமாகும். இன்ப நுகர்வுக்கு இலக்கணம் வகுத்துள்ளார்கள் நமது முன்னோர்கள். அதுவே குடும்ப அமைப்பாகும். அதில் குழந்தையின்பம் கடவுள் மயமானது. நல்ல குடும்பம் வீடாகிறது. அதுவே மோட்சம். குடும்பம் சிதைந்தால் நரகமாகிவிடும். பாரதத்தின் வாழ்க்கை நலன் நல்ல குடும்பத்தில் அமைந்திருக்கிறது.

குடும்ப அமைப்புக்கு குடும்ப வாழ்க்கைக்கு குடும்பக் கல்வியே அடிப்படையாகும். அதுவே தேசியக் கல்விக்கு அடிப்படையாகும் என்று பாரதி குறிப்பிடுகிறார்.

தேசியக் கல்வியில் தாய் மொழி முக்கிய இடம் பெறுகிறது. முதலிடம் பெறுகிறது. தாய் மொழியில் அல்லாமல் வேறு மொழியில் கல்வி பயில்வது பயிற்று விப்பது முழுமை பெறாது.