பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTT Ly Ly TCy MTT TYCLLLyTTySK SLLLLLS S00S

“தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலிஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால் அது “தேசியம்” என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரி பூரணசகாயத்தை எதிர் பார்க்க வேண்டுமானால் இந்த முயற்சிக்கு தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதை தம்பட்டம் அடிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழ் சிறந்திடுக. பாரத தேசம் முழுவதிலும் எப்போதும் போலவே வட மொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூரணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஒங்குக. எனினும் தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக” என்று பாரதி குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பாரதி தேசியக் கல்விக்கு, தாய் மொழிக்கு, தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை வலுவாக எடுத்துக் கூறுகிறார்.

இத்துடன் ஆரம்பப்பள்ளிக் கூடம், பாடங்கள், அவைகளில் எழுத்து, படிப்பு, எண் கணக்கு, இலேசான சரித்திரப் பாடங்கள், பூமி சாஸ்திரம், மதப் படிப்பு, ராஜ்ய சாஸ்திரம், பொருள் நூல், ஸயன்ஸ் அல்லது பெளதீக சாஸ்திரம், கைத்தொழில், விவசாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம், சரீரப் பயிற்சி, யாத்திரை, முதலியவை பற்றியெல்லாம் பாரதி தேசியக் கல்வி என்னும் தலைப்பில் விவரித்துக் கூறுகிறார்.