பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஹிந் glåss fleir en-LLth 154

22.ஹறிந்துக்களின் கூட்டம்:

இந்தத் தலைப்பில் பாரதியார் சில முக்கியமான கருத்துக்களைத் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவை இன்றும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்னையாகும். பாரதி எழுதுகிறார்.

“இந்தியா முழுவதிலுமுள்ள ஹிந்துக்களின் அனு கூலத்திற்குப் பாடுபட்டுவரும் அகண்ட பாரத ஹிந்து சபையின் காரியதரிசியாக ரீரத்தினசாமு என்பவர் தேராது.ான் பட்டணத்திலிருந்து “ஹிந்து” பத்திரிகைக்கு எழுதியிருக்கும் லிகிதமொன்றில் பின்வருமாறு சொல்கிறார்.

“இந்த மாதம் முதல் தேதி சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னுாறு பேரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமான -முடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.”

ஆம் ஹிந்துக்கள் வருத்தப் படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்புப் பிடித்தெரியும் போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும் போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும் போதே துங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்” என்று பாரதி குறிப்பிடுகிறார்.

மதமாற்றம் செய்வதை, இஸ்லாமிய மதத் தலைவர்களும், கிறிஸ்தவ மதத் தலைவர்களும் பல ஆண்டுகளாகச் செய்து