பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 12

பாரதியின் கருத்துக்கள், முதல், தமிழ் விழாக்கள் பற்றியும், தமிழ் பத்திரிகைகள் பற்றியும் தமிழ் நாட்டில் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு பற்றியும், தமிழ் மொழி வழிக் கல்வி பற்றியும், பாரதி தனது கவிதைகளுக்கு எழுதியுள்ள முன்னுரைகளில் உள்ள உரைநடை மொழியை மேற்கோள் காட்டியும், அவருடைய உரைநடைக் கட்டுரைப் பகுதிகளை எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. பாரதியின் மிகச் சிறந்த பணிகளில் ஒன்று பகவத் கீதைக்கு அவர் செய்துள்ள மொழியாக்கமாகும். பகவத் கீதை குறித்து பாரதியின் தமிழாக்கம் மிகச் சிறந்த படைப்பாகும். அத்துடன் அந்தத் தமிழாக்க நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை ஒரு மிகச் சிறந்த இலக்கியமாகும், இந்த நூல் தமிழில் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன. இந்த நூல் மேலும் அதிகமாகத் தமிழ் மக்களிடம் பரவ வேண்டும். அந்த நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை ஒரு சிறந்த இலக்கியம் மட்டுமல்ல, அது அவருடைய உரைநடைத் தமிழுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பாரதி தன்னுடைய உரைநடைப் பகுதி கட்டுரைகளில் பல புதிய சிறந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அவைகள் எல்லாக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. நமது நடைமுறைச் செயல்பாடுகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும். இந்தக் கட்டுரைகளை மிகவும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.

பாரதி தன்னுடைய உரைநடைக் கட்டுரைகளில் எடுத்துக் கூறியுள்ள கருத்துக்கள், நான்கு புருஷார்த்தங்களுக்கும் அவர் கூறியுள்ள சுருக்கமான விளக்கம், ஒரு நாட்டில், அதன் பண்பாட்டில், கொள்கை நிலைபாட்டில், வளர்ச்சியில், மேம்பாட்டில், அறிவாளிகளின், படிப்பாளிகளின் கல்வித்துறையில் முன் வரிசையில் உள்ளவர்களின் நிர்ணயமான பங்கும் பாத்திரமும், வேதங்களின் மொழி, இந்திய