பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. şırölğğıðssfkör &ıtı ü: 155

ஹிந்துமதம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை வழிமுறை. இன்று இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பாலும் ஹிந்து மதத்திலிருந்து மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான். அவர்களுடைய முன்னோர்கள் ஹறிந்துக்களாக இருந்தவர்கள்தான். எனவே வாழ்க்கை வழிமுறையால் நாம் அனைவரும் இந்துக்களே. வழி பாடுகளினால் -தான் வேறுபட்டிருக்கிறோம்.

ஆயினும் சில சூழ்நிலைக் கட்டாயங்களினால் இன்றைய ஹறிந்துக்கள் என்பவர்கள் ஒன்று படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதைவைத்தும் பாரதியார் தனது கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. பாரதியார் கூறுகிறார்:

ஹிந்து மதம் ஒன்று. சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு சமயங்களும் அதன் உட்பிரிவுகள் இதை தேசத்து ஜனங்களில் பெரும்பாலோர் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டி -ருக்கிறார்கள்.

பிரம்ம, கூடித்திரிய, வைசிய, சூத்ர, - என்ற நான்கு பிரிவிலும், பெரும் பகுதியோர் எல்லா தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்குகிறார்கள், வேத காலத்து ரிஷிகளைப் போலவே. ஆனால் சைவ வைஷ்ண மடங்களிலும் பெளராணிகர் கூட்டத்தினர் பரஸ்பரமாகிய மத தண்டனைகள் கொஞ்சம் நடந்து வருகின்றன. அதை உடனே நிறுத்த வேண்டும்.

பாரதியார், அக்காலத்தில் நடைபெற்ற கட்டாய மத மாற்றங்களைப் பற்றி மிக்க வருத்தத்துடன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இத்தகைய கட்டாய மதமாற்ற நடவடிக்கைகள் இப்போதும் கூட நடைபெறுகிறது. இது ஒரு நாகரிகமற்ற செயலாகும். இத்தகைய செயல்கள் நிறுத்தப்படுவது நல்லது.