பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில்-அரசியல் чери Mb &qpgynuês®ščssir-el #«fisurers_169

கம்பன் வள்ளுவன் இளங்கோவடிகள் பாரதி முதலியோருக்கு மன்றங்கள் அமைத்து விழா எடுத்தல், மற்றும் சைவத்திருமுறை சபைகள், திவ்யப் பிரபந்தச் சபைகள் மூலம் சமயச் பிரச்சாரம் செய்தல் முதலிய பணிகளை மேற் கொள்ளலாம்.

அத்தகைய பணிகள், இப்போதும் பல ஊர்களிலும் நடை பெறுகின்றன. அவை விரிவு பட்டும் வருகின்றன. ஆயினும் ஹிந்து சமுதாயத்தின் விரிவின் அளவுக்கு இன்னும் விரிவு படவில்லை. கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.

இராமகிருஷ்ணா மிஷன் பல அறிய சேவைகள் குறிப்பாகக் கல்வி, ஆஸ்பத்திரி முதலிய சேவைகளில் முன்னணியில் இருக்கிறது. வித்தியா பாரதி அமைப்பு நாடு முழுவதிலும் பெரிய அளவில் கல்விப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சேவா பாரதி அமைப்புகள் பல சமூக சேவைகள் செய்து வருகின்றன. வள்ளலார் சார்பான சபைகள் தமிழ் நாட்டில் ஆயிரத்திற்கு மேல் உள்ளன. அவைகள் மூலம் கல்விப் பணிகளும் சமுதாயப் பணிகளும் செய்ய வேண்டும். அவைகளுக்கு பல செல்வந்தர்களும் பல தொழில் நிறுவனங்களும் அவைகளின் அறக்கட்டளைகளும் உதவி செய்ய வேண்டும்.

நமது ஆலயங்களின் நிர்வாகங்கள் அரசாங்கத்தின் பிடியிலிருந்து அரசாங்க நிர்வாகத்திலிருந்து நீங்க வேண்டும். சயேச்சையாக செயல்பட வேண்டும். அவைகள் ஹறிந்து சமயப் பணிகளும் சமுதாயப் பணிகளும் செய்ய வழி செய்யப்பட வேண்டும். திருப்பதி - திருமலை தேவஸ்தானம் ஒரு முன்னுதாரணம். அந்த தேவஸ்தானம் பல சிறந்த சமுதாயப் பணிகளைச் செய்து வருகிறது. ஒரு சிறப்பான புகழ் பெற்ற பல்கலைக் கழகத்தை நடத்தி வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். அது போல் நமது கோவில்களும் அதன் சொத்துக்களும் அதன் செல்வாக்கும் பக்தர் ஆதரவும் ஹறிந்து சமுதாயத்தை மேம்படுத்த, நாட்டின் கல்வி, சுகாதாரம், வைத்திய வசதிகளை மேம் படுத்த வழி செய்ய வேண்டும்.