பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் oppte zgoguëzgošgëæst-se #sfarzs_VI

“நான்கு வர்ணத்தோருக்குரிய நால்வகைத் தொழில்களும் ஹிந்துக்கள் அல்லாத பிறர் நியமனப்படி நடக்கின்றன. நாமெல்லோரும் தொண்டர் நிலையில் இருக்கிறோம். தேசம் கெட்ட ஸ்திதியில் இருக்கிறது. உங்கள் உடம்பில் பிராம்மணரத்தம் ஒடுவதாகவும் கூடித்திரிய ரத்தம் ஒடுவதாகவும் நீங்கள் வாயினால் சொல்லலாம். ஆனால் உங்களுடைய வாழ்க்கை அப்படியில்லை.”

இவ்வாறு திலகர் சொல்லியதிலிருந்து நமது தேசத்திற்கு மிகுந்த நன்மை உண்டாகக் கூடும். ஏனென்றால் இவர் தேசம் முழுவதிலும் சுதேசிக் கட்சியாருக்குத் தலைவராக இருப்பது மாத்திரமேயன்றி மஹாராஷ்டிரத்து வைதீகப் பிராமணர்களுக்கும் தலைவராக விளங்குகிறார். வேத சாஸ்திர ஆராய்ச்சியில் உயர்ந்த கீர்த்தி பெற்றவர். நெடுங்காலமாக இடைவிடாது செய்து வரும் ஆராய்ச்சியினாலும் உயர்ந்த மேதையினாலும் நமது பூர்வீகமான ஜாதி தர்மத்தின் உட்கருத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு நமது தற்காலப் பிரிவுகளைக் கண்டிக்கிறார். புராதன தர்மமே பின் பற்றத் தக்கது. ஹிந்துக்களாகிய நாமெல்லாரும் இவருடைய உபதேசப்படி நடந்தால் நன்மை உண்டாகும். இப்போதுள்ள ஜாதி விரோதங்களும் தாழ்வுகளும் நீங்கி எல்லோருக்கும் மேன்மையுண்டாகும்” என்று பாரதியார் எழுதுகிறார்.

பாரதி தனது பல கட்டுரைகளிலும் ஜாதி அமைப்பு முறையைக் கண்டித்தும் ஜாதிப் பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் சாடியும், ஜாதிக் கொடுமைகளைக் கடுமையாக ஆட்சேபித்தும் எழுதியுள்ளதுடன் தாழ்த்தப்பட்டுள்ள மக்களைக் கை கொடுத்து மேலுயர்த்த வேண்டும் என்றும் மற்றவர்களுடன் சமமாகக் கொண்டு வர வேண்டும் என்றும் எழுதுகிறார். அவர்கள் வசிக்கும் இடங்களில் இந்து சமயத் தலைவர்கள் சென்று அவர்களுக்குப் போதனைகள் செய்ய வேண்டும். பள்ளிக் கூடங்கள் அமைத்து அவர்களுக்குப்