பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. திலகர் கூறிய 172

பாடம் சொல்லிக் கொடுத்து கல்வி அறிவில் உயர்த்த வேண்டும். அவர்களுக்கு வாழ்க்கைத் தேவைகள் கிடைக்கச் செய்ய வேண்டும், என்றெல்லாம் பல இடங்களிலும் பேசுகிறார். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எழுதுகிறார். பறையர் என்னும் தலைப்பில், ஹிந்து மத விரோதிகளின் பேச்சைக் கேட்க வேண்டாம். நந்தனாரையும் திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா? பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து “பட்லர்” களைப் பற்றிய பேச்சில்லை. கிராமங்களில் உள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிய பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டி, உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக் கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நானம் பண்ணச் சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக் கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன் தரக் கூடிய கைங்கரியம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாகும் கைங்கரியம்.

மகாத்மா காந்தி தனது நிர்மாண திட்டத்தில் ஹரிஜன சேவை என்னும் பணிக்கு முன்னோடியாக, பாரதி இந்த திட்டத்தை முன் வைத்திருப்பதைக் காணலாம். ஜாதி ஒழிப்பு பற்றி வாய்ச் சவடாலாகப் பேசிப் பயனில்லை. ஆக்க பூர்வமாக இத்தகைய பணிகளைச் செய்ய வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும். என்ன சொன்னோம் என்பதைக் காட்டிலும் என்ன செய்தோம் என்பது முக்கியமாகும்.

xx xx xx