பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TLLLL LLLL LLL LLL LLLCL LLLLLLLTTLLLLSL LLLLLLLL SS L0

25. பஞ்சமர்:

பஞ்சமர் என்னும் தலைப்பில் பாரதி எழுதுகிறார்.

"பறையர் ஹறித்துக்கள். அவர்களைக் கை துக்கி விட்டு மேல் நிலைக்குக் கொண்டு வருதல் நம்முடைய தொழில்.

"பறையருக்கெல்லாம் நல்ல சோறு, நல்ல படிப்பு, முதலிய செளகரியங்களும் மற்ற மனுஷ்ய உரிமைகளும் ஏற்பாடு செய்து கொடுத்தல் நம்முடைய கடமை. சென்னை பட்டினத்தில் நாயர் கட்சிக் கூட்டமென்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும் படி துண்டியதாக பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்ராயபேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிபிடி வரை கொண்டு போவோர். இந்த தேசத்தின் ஹறிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள். இது நிற்க.

அடுத்த நவம்பர் மாதம் பட்டினத்தில் பறையரை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் மகா சங்கம் நடத்தப் போவதாகக் கேள்விப் பட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். முற் காலத்தில் நந்தனார் தோன்றியது போலவே இப்போது மேற்படியார் குலத்தில் ஸ்ஹஜாநந்தர் என்ற சந்யாசி ஒருவர் நல்ல பக்தராயும் ஸ்வஜநாபிமானம் உடையவராகவும் தோன்றியிருக்கிறார். அவருடைய முயற்சிகளை முன்னுக்குக் கொண்டு வரும் படி உதவி செய்ய விரும்புவோர் குத்தியில் ரீகேசவப் பிள்ளை திவான் பஹதூருக்கு எழுதி விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். மேற்படி ஸஹஜா நந்தர் சிதம்பரத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் பறைப் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக் கூடம் போட்டிருக்கிறார். அந்தப் பள்ளிக் கூடம் மே மாதம் திறக்கப் பட்டது. இப்போதைக்கு மண் கட்டிடம். கூரை வேய்ந்திருக்கிறார்கள். அதில் நானுறு பிள்ளைகள் வரை ஏற்கனவே