பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. பஞ்சமர் 174

சென்று படிக்கிறார்கள்” என்று எழுதுகிறார். மேலும் “தியஸாபிக்கல் சங்கத்தார் சில பஞ்சமப் பாட சாலைகளை ஏற்படுத்தி அந்த ஜாதியாரை மேன்மைப் படுத்தும் பொருட்டு மிகுந்த சிரத்தையுடன் உழைத்து வருகிறார்கள். றுரீமதி அணி பெஸண்டுக்கு இந்த விஷயத்தில் ஏற்பட்டிருக்கும் அன்பும் உத்சாஹமும் மெச்சத் தகுந்தன.

பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஒளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை. சிறிது காலத்திற்கு முன்பு ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து 'முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ?” எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ? இரு பிறப்பாளராவார்? என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறை என்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகையென்றும் அதைக் கொட்டுவோன் பறையன் என்றும் பறை என்பது சக்தியின் பெயரென்றும் அவளே ஆதி என்றும் சிவனே பகவன் என்றும் பிராமண ரூபம் கொண்டு அவளுடன் வாழ்ந்தார் என்றும் பறையர் மேன்மைப் பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார் என்றும் பலவித நீதிகளைச் சொன்னார். அதே கருத்துடையவராய் ஹறிந்துக்களுடைய விடுதலையிலும், மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்து வரும் ரீநீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேச மித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கை துக்கி விடுவதில் தம்மால் இயன்றவரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பாரதி எழுதியுள்ளார்.

தாழ்த்தப் பட்ட மக்களை மேம்படுத்துவதில் சமத்துவம், கல்வி, வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை பாரதி வற்புறுத்தியுள்ளதைப்