பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் рррр Sgegnuss-Gégoss-o. சீனிவாசன் 175

பார்க்கிறோம். இன்று சில மாற்றங்கள் அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு மூலம் மற்றும் இதர முயற்சிகள் மூலம் தாழ்த்தப் பட்ட மக்களுக்குப் படிப்பு வசதி, அரசு வேலைகளில் வாய்ப்பு, சட்ட மன்றங்கள் பாராளுமன்றங்களில் பிரதிநிதித்வம், அரசியல் சட்டப்படி சமத்துவம் சம வாய்ப்புகள் முதலியன ஏற்பட்டுள்ளன. இவை மூலம் அவர்களில் பத்து சதவீத மக்களுக்கே அதிக பலன் கிடைத்துள்ளது. என்றாலும் நம்ப ஆளு அங்கே இருக்கிறார் என்னும் சமூக அந்தஸ்து வந்திருக்கிறது என்றாலும் நலிந்த பிரிவுகளில் உள்ள அனைத்து மக்களும் கை துக்கி விடப் பட வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன. அவைகளையும் விரைவில் முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

xx xx xx