பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLLL LSLTT LLL TCLy LTT LLLLLLTT LLLSK LLLLLS 000

இத்தனை ரூபாய் கிரையம் என்று முடிவு செய்து வைத்து அதன் படி விவாஹங்கள் நடத்தும் வழக்கமில்லை.

“சீனா, ஜப்பான், பாரசீகம் முதலிய எல்லா மனுஷ்ய தேசங்களிலேயும் விவாஹம் அன்பையே ஆதாரமாகக் கொண்டு செய்யப் படுகிறது. இங்கே பணத்துக்காக விவாஹங்கள் செய்து கொள்ளுகிறார்கள். சாதாரணமாகப் பெண்களுக்கு விலை கூறி விற்பது வழக்கமாகவே இருந்தது. இப்போது ‘பூசுரர்” (பூமண்டலத்திலே தேவர்) ஆகிய பிராமணக் கூட்டத்தார் மாப்பிள்ளைக்கு விலை போட்டு விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். புண்ணிய பூமி பாரதம். பணம் கொடுக்கச் சொல்லி ஏழைக் -குடும்பத்தாரை வதை செய்யும் போது தான் துன்பம் அதிகப் படுகிறது.” என்று பாரதி குறிப்பிடுகிறார்.

இந்த வரதட்சணைக் கொடுமை என்பது பெரும்பாலும் பிராமணர்களுக்கிடையில் தான் இருந்தது. இன்று அந்த நோய் எல்லா ஜாதிகளுக்கிடையிலும் பரவியிருக்கிறது. பணம், பவுன்டுநகை) பண்ட பாத்திரம், இப்படி மாப்பிள்ளையும் மாப்பிள்ளை விட்டாரும் கேட்பது என்றாகிவிட்டது. திருமணத்திற்குப் பின்னர், அந்தப் பெண் கொடுமைப் படுத்தப்படும் செய்திகள் வருகின்றன. சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை யாரும் சட்டை செய்வதில்லை. இந்தத் தீமை தொடருகிறது.

வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து மாதர் சங்கங்கள் பல தீர்மானங்கள் போடுகிறார்கள். ஆயினும் இது சமுதாயப் பிரச்னையாக நீடிக்கிறது.

பாரதியார் தனக்குத் தெரிந்த ஒரு செய்தியை எடுத்துக் கூறி இந்தக் கொடுமையை சுட்டிக் காட்டுகிறார். “திருநெல்வேலி ஜில்லாவில் எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்திலே ஒரு பெண்ணுக்கு