பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2உமதிப்படஇந்துத்தளின்டமதிப்பும்-மரியாதையும் 188

பெறுவதற்கு நமது மக்கள் பல லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஒற்றுமையுடன் ஒன்று திரள வேண்டும் என்பது பாரதியின் குரலாகும்.

மேலை நாடுகள் தங்கள் நாடுகளில் மக்கள் தங்கள் உரிமைகளை முன் வைத்து கோரிக்கைகளை முன் வைத்து அதற்கான கிளர்ச்சிகளில் ஈடுபடும் போது அதைத் திசை திருப்புவதற்கு அடுத்த நாடுகளுக்கு எதிராகப் போர்க் குரலைக் கிளப்புகிறார்கள். நாட்டு மக்கள் அனைவருக்கும் போர் பயிற்சி கொடுத்து விடு தவறாமல் ஆள் பிடித்து பல லட்சக் கணக்கில் படை சேர்த்து போர்களைத் தொடுக்கிறார்கள், போர் நடத்து -கிறார்கள்.

நான் சண்டைக்காரன் இல்லை. சமாதானக்காரன் என்று பாரதி குறிப்பிடுகிறார். அதன் பொருள் நாம் சண்டைக்குப் பயந்த கோழைகள் என்பதல்ல. நாம் மனிதாபிமானம் மிக்கவர்கள். நமக்கு ஆக்கிரமிப்பு நோக்கம் கிடையாது. ஆனால் நாட்டை அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்க விரும்புகிறோம். நம் மீது திணிக்கப்படும் அவமானத்தைப் போக்க விரும்புகிறோம். நாட்டின் வறுமையையும் பட்டினியையும் போக்கி நாட்டை வளப்படுத்த விரும்புகிறோம். நாட்டை மற்றவர்கள் சூரையாடுவதைத் தடுக்க விரும்புகிறோம். அதற்காக நாட்டு மக்களை பல லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் திரட்ட விரும்புகிறோம். முதலாவது உலகப் போரை ஐரோப்பிய நாடுகள் நடத்தி முடித்த போது, இந்தியாவில் இருபதாம் ஆண்டுகளில் வலுவான சுதந்திரக் கிளர்ச்சி ஏற்பட்டது.

1939-ம் ஆண்டில் இரண்டாவது உலகப் பெரும் போர் ஐரோப்பாவில் தொடங்கியது. ஜப்பான் மூலம் ஆசியாவிலும் போர் பரவியது. இந்தியாவிற்கு நேரடியாகப் போரில் சம்பந்தமில்லை. ஆயினும் இங்கிருந்த அன்னிய ஆட்சியாளர்கள் இந்திய நாட்டையும் போரில் ஈடுபடுத்தினார்கள். -