பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. suggtäisnauti 190

3 0. வருங்காலம்:

வருங்காலம் என்னும் தலைப்பில் பாரதி நெடிது நோக்குடன் பல கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்.

உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக் கொண்டு வருகிறதென்பதைத் தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக் கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விருப்பங்களிலும், அற்பச் செயல்களிலும் நாளையெல்லாம் கழிய விட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல வாழ்வதில் பயனில்லை.

வர்த்தகம் செய்வோர் கோடிக்கணக்கான பணப் பழக்கம் ஏற்ப்டும் படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேட வேண்டும். படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத் தேற வேண்டும். ராஜ்ய விவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு மற்ற ராஜ தந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும் படியான பெரிய பெரிய யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ் பெற வேண்டும்.

“நம்முள்ளே கல்வியும், செல்வமும் உடையோர் கூடிய ஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக் கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டு பிடித்து அவற்றை நமது தொழிலாளர்களைக் கொண்டு செய்வித்தல் லாபமுண்டாகும்.

“வெளிநாடுகளுக்குக் கப்பலேறிப் போங்கள். (இப்போது விமானம் ஏறிப் போங்கள்) புறப்படுங்கள் புறப்படுங்கள் தொழிலாளர்களே, வியாபாரிகளே! வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் யாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்து