பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் Leppte zgoguë zgoš###er-se. சீனிவாசன் 193

தோட்டங்களுக்கும் இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்தும் பிகார் மாநிலப் பகுதிகளிலிருந்தும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று அந்த நாடுகளில் குடியேறினார்கள். அங்கு அந்த நாடுகளின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும், பொது வாழ்விலும் பங்கு கொண்டு, அந்த நாடுகளின் சிறந்த பிரஜைகளாக வளர்ந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் அந்தந்த நாடுகளின் அரசியல் பொருளாதார கலாச்சார வாழ்விலும் சிறப்பாகப் பங்கு கொண்டு பணியாற்றி வருகிறார்கள். அந்த நாடுகளில் உள்ள பூர்வ குடிமக்கள், குடியேறியுள்ள இதர மக்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் அன்னிய ஆட்சி இருந்த வரை, அந்த நாடுகளில் வாழ்ந்த இந்திய மக்கள் எந்தவிதமான ஆதரவும் இல்லாதிருந்தார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நமக்கும் அந்த நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், அரசியல் பொருளாதார கலாச்சார ராஜ தந்திர உறவுகள் அபிவிருத்தி அடைந்து வருகிறது. நமது நாடு பொருளாதாரத் துறையிலும் கலாச்சாரத் துறையிலும் பலம் பெற பலம் பெற அந்த நாடுகளுடன் உள்ள நல்லுறவுகள் மேலும் பலப்படும். நமது பல்கலைக் கழகங்கள், என்ஜினியரிங், தொழில் நுட்பம் மற்றும் வைத்தியக் கல்லுரிகள், அந்த நாடுகளின் மாண்வர்களுக்கு தனி இடம் கொடுத்து சலுகைகள் கொடுத்து, உதவிகள் செய்ய வேண்டும். அந்த நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் சிறப்புக் கல்லூரிகளுக்கும் நமது பேராசிரியர்கள், ஆசிரியர்கள் சென்று உதவி செய்ய வேண்டும். அந்த நாடுகளுடன் உள்ள வியாபாரத் தொடர்புகளையும் கலாச்சாரத் தொடர்புகளையும் மேலும் அதிகமாக பலப்படுத்த வேண்டும், விரிவு படுத்த வேண்டும். நமது பத்திரிகைகள் அந்த நாடுகளின் பால் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான பொருள்கள் இப்போது ஏற்றுமதியாகின்றன. இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும்