பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் уобрне *QPgmuseq933&ser--e. சீனிவாசன் 195

3 1.தொழிலாளர்:

தொழிலாளர் என்னும் தலைப்பில் பாரதியார் அருமையான -தொரு கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரை மூலம் பாரதி தொழில் செல்வம் கல்வி அறிவு ஆகியவற்றை இணைத்துக் காட்டுகிறார். இது மிக முக்கியமான கருத்தாகும். இக்கருத்தை நாம் ஆழ்ந்து கவனத்தில் கொள்வதும், புரிந்து கொள்வதும் அவசியமாகும். அக்கட்டுரையில்,

“கைத்தொழில்களாலே செல்வம் விளைகிறது. அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப் படுகிறது. கைத் தொழில் செல்வத்தை ஏற்படுத்துகிறது. அறிவுத் தொழில் கைத் தொழிலை நடத்துகிறது. .

வியாபாரம், கைத்தொழில் முதலிய சமாதான நெறிகளில் செல்வம் சேர்ப்பதற்கு மிக உயர்ந்த புத்தி நுட்பம் எக்காலத்திலும் இன்றியமையாததாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இக்காலத்திலும் இவை புத்தித்திறமை இல்லாமல் போனால் ஒரு கூடிணம் கூடத் தரித்து நிற்கமாட்டா.

இந்தச் செய்தியை உணர்ந்தே ஆதிகால முதல் அறிவுப் பயிற்சியுடைய வகுப்பினர் கைத்தொழிலாளிகளுக்கு கல்வி ஏற்படாத படியாக வேலை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். ‘எழுத்துத் தெரிந்த சூத்திரனை மிகவும் தொலைவில் விலக்கி விட வேண்டும்” என்ற வினோத விதியொன்று மனு ஸ்மிருதியிலே காணப்படுகிறது. நமது தேசத்திலே மட்டுமேயன்று, உலகம் முழுமையிலும் எல்லா நாடுகளிலும் கைத் தொழிலாளருக்குக் கல்விப் பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.

ஆனால் இந்த சூழ்ச்சியை மீறி எல்லா நாடுகளிலும் முக்கியமாக நமது பாரத தேசத்தில் கைத்தொழில் புரியும் கூட்டத்தோளில் பற்பலர் கல்வித் தேர்ச்சியடைந்து வந்திருக்கிறார்கள்.