பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTTT LSLLL ML LLy TLy LsL LLLLLLLLLS LL LLLLLLLLS 000

நடைபெறவில்லை. அந்த முயற்சிகளுக்கு எதிர்ப்பு ஏற்பட்டு கல்வியும் செல்வமும் அறிவும் உழைப்பும் இணைந்தே வந்திருக்கிறது, இணைந்தே வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது.

வள்ளுவன் மிகப் பெரிய அறிவாளி. திருக்குறளைப் படைத்தவன். அவனை நெசவுத் தொழிலோடு இணைத்துப் பேசுகிறோம். எத்தனையோ நெசவாளர்கள் அறிவிற் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

கம்பன் மாபெரும் கவிஞன் கவிச் சக்கரவர்த்தி, அவன் படைத்த பேரிலக்கியம் உலக இலக்கியங்களில் முதல் வரிசையில் முன் வரிசையில் உள்ளது. அந்த கவிஞன் கம்பனை சாகுபடித் தொழிலோடு, பயிர் தொழிலோடு இணைத்துப் பேசுகிறோம்.

கண்ணன் கடவுள் பிறப்பு. மாபெரும் அரசியல் ஞானி. சகல கலைகளிலும் வல்லவன். பகவத் கீதையைப் படைத்தவன். அந்த மாபெரும் சக்தி படைத்த தெய்வத்தை ஆடுமாடு மேய்த்தலோடு கால் நடைச் செல்வத்தோடு இணைத்துப் பேசுகிறோம்.

வியாசன் மிகப்பெரிய அறிஞன். அவருடைய அறிவாற்றலுக்கு உலகில் எங்கும் ஈடுஇணையே இல்லை. அவன் வேதங்களைத் தொகுத்தவன். மகாபாரதத்தை இயற்றியவன், பாகவதத்தை எழுதியவன், அவனை மனிதனுடைய ஆதி தொழில்களில் ஒன்றான மீன் பிடித்தொழிலோடு இணைத்துப் பேசுகிறோம்.

எனவே கல்வியும் செல்வமும் அறிவும் தொழிலும் ஒரிடத்தில் சேர்ந்து இருக்காது என்னும் கட்டுக்கதை தகர்ந்து விட்டது.

பெண்களும், சூத்திரர்களும் படிக்க வேண்டாம், அவர்கள் வேதங்களைப் படிக்க வேண்டாம், அவர்களுக்குக் கல்வி பயிற்சி