பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tmv£uìs e-sysouisv -ov&uov uoi√pub gopgmuseubågisser-ol fsfounes 201

3 2.பருந்துப் பார்வை:

பருந்துப் பார்வை என்னும் தலைப்பில் பாரதி நானா விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவை சிறந்த உரை நடைக் குறிப்புகள். அவைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

கலைகள்

இன்று தேவர்களை அழைக்கிறோம்.

இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருதயுகத்தை நாட்டும் பொருட்டாக.

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமைக் கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷசக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதல்ை தரும் பொருட்டாக, ==

கல்வி, அறிவு, தூய்மை, பெருமை, இன்பம், செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒளிகளெல்லாம் வெற்றியடையும்

_ " - - ... I

பொருட்டாக,

இன்று தேவர்களை அழைக்கிறோம் என்று பாரதி கூறுகிறார். மக்கள் அனைவரும் முழுமையான விடுதலை பெற்று செல்வமும் கல்வியும் அறிவும் பெருமையும் பெற வேண்டும் என்பதே பாரதியின் வேண்டுகோளாகும்.

விடுதலை பெற்று இவ்வுலகத்தில் நீண்ட காலம் வாழ்வேன் என்று பாரதி பராசக்தியைப் பலமுறை வேண்டுகிறார்.

தென் மாநில மொழிகள் - மொழிவழிக் கல்வி

m தசுவின பாஷைகளிலே - அதாவது தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், மலையாளத்திலும் - சாஸ்திர சயின்ஸ்) பாடம் கற்றுக் கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லை என்று