பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 15

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தனது தங்கையின் திருமண நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக மதுரைக்கு வடக்கே சிறிது தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து அருள்மிகு கள்ளழகர் தனது பரிவாரங்களுடன் புறப்பட்டு வருகிறார். வைகையின் வடகரைக்கு வந்து சேர்ந்து ஆற்றில் மணல் வெளியில் இறங்குகிறார். அப்போது அருள்மிகு மீனாட்சியம்மன், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்து முடிந்து விடுகிறது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டு வைகை ஆற்றில் இரங்கிய அழகர் பெருமான் தனது குதிரை வாகனத்தில் ஊர் திரும்பப் புறப்படுகிறார். இந்த அற்புதமான தெய்வீகக் காட்சியைக் காண்பதற்கு தென்னாடு முழுதிலுமிருந்தும், சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் சாதாரண மக்கள் தங்கள் மனைவி மக்களுடன் குழந்தை குட்டிகளுடன் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து வைகையாற்று மணலில் கூடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் பல லட்சக் கணக்கான மக்கள் கூடுவார்கள். வைகை ஆறு முழுவதிலும் அழகர் பெருமானைச் சுற்றிலும் மக்கள் வெள்ளம் கூடியிருக்கும். எங்கு பார்த்தாலும், கோவிந்த நாமம் ஒலிக்கும். குறைந்தது பத்து லட்சம் மக்கள் தங்கள் கட்டுச் சோறு மூட்டை முடிச்சுகளுடன் ஆற்றில் இரங்கியுள்ள அழகரை சேவித்துவிட்டு, அந்த ஆற்றுமணலில் அமர்ந்து சோற்று மூட்டையை அவிழ்த்து குடும்ப சகிதம் பிள்ளைகுட்டிகளுடன் சாப்பிட்டுவிட்டு அழகர் கூடவே திரும்புவார்கள். அறிவு சார்ந்த சாதாரண மக்கள் கூட்டம் பேரலைபோல் பொங்கும்.

பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூட்டம், சாதி மத இன மொழி வேறுபாடுகள் இன்றி ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக பக்திப் பரவசத்துடன் குது.ாகலமாக ஆற்றில் கூடுவார்கள். அழகரை சேவிப்பார்கள். மணல் வெளியில் அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பாடு முடித்து அழகருடன் சேர்ந்து ஊருக்குத்